Load Image
dinamalar telegram
Advertisement

மறக்க முடியுமா? வறுமையின் நிறம் சிவப்பு

மறக்க முடியுமா? வறுமையின் நிறம் சிவப்பு Entertainment பொழுதுபோக்கு

வெளியான ஆண்டு: 1980
நடிகர்கள்: கமல், ஸ்ரீதேவி
இயக்கம்: கே.பாலசந்தர்
தயாரிப்பு: பிரேமாலயா ஆர்ட்ஸ்

கடந்த, 1970 - 1980களில், வேலையின்மை பெரிய பிரச்னையாக இருந்தது. அது தொடர்பான படங்கள் வெளிவந்து, ஆட்சியாளர்களுக்கு, இளைஞர்களின் கோபத்தை சுட்டிக்கட்டின. அப்படிப்பட்ட படம் தான், வறுமையின் நிறம் சிவப்பு.கே.பாலசந்தர், குடும்ப கதைகளில் இருந்து, நாடக பாணி திரைக்கதையிலிருந்து வெளியேறி, இந்த சமூகம் மீதான கோபத்தை, ஆதங்கத்தை, இப்படத்தில் வெளிப்படுத்தினார்.

பொதுவுடைமை சிந்தனை, பாரதியார் நேசன், சமூக கோபக்கார இளைஞராக படைக்கப்பட்ட, ரங்கன் கதாபாத்திரத்தை, கமல் முழுமையாக உள்வாங்கி, சிறப்பாக நடித்திருந்தார்.டில்லி நகரில், வேலையில்லா திண்டாட்டத்தில் சிக்கி திணறும் கமல், திலீப், எஸ்.வி.சேகர் ஆகிய மூன்று நண்பர்கள் வழியாக, இந்த சமூகத்தில் அநியாயங்களை தோலுரித்துக் காட்டினார், கே.பாலசந்தர்.பழைய பேப்பர் கடைக்காரர், பாரதியார் கவிதைகள் புத்தகத்தை வேண்டாம் என்பார்; ஏன் என்ற கேள்விக்கு, இது, படிக்க நல்லா இருக்கும்; ஆனா மடிக்க வராது என்பார். அம்பென பாய்ந்தது, வசனங்கள்.

ஸ்ரீதேவி... இப்படத்தில் அவ்வளவு அழகு!பிரதாப் போத்தன் கதாபாத்திரம், தன் பக்கத்து நியாயங்களுடன் படைக்கப்பட்டிருந்தது.எம்.எஸ்.விஸ்வநாதன், இசையமைத்திருந்தார். சுப்பிரமணிய பாரதியாரின், நல்லதோர் வீணை செய்தே, தீர்த்தக் கரையினிலே... ஆகிய பாடல்கள், இப்படத்தில் பயன்படுத்தப்பட்டன. வித்தியாசமான இசையமைப்பில், கண்ணதாசன் எழுதிய, சிப்பி இருக்குது... பாடல், இன்றும் பலரது விருப்பமான பாடலாக ஒலித்துக்கொண்டிருக்கிறது.

இப்படம், தெலுங்கில், அகாலி ராஜ்யம் எனும் பெயரில், மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டது. 1983ல், கே.பாலசந்தரே, இப்படத்தை, கமல், அனிதா ராஜ் நடிப்பில், ஜாரா சீ ஜிண்டகி எனும் பெயரில், ஹிந்தியில் எடுத்தார்.வறுமையின் நிறம் சிவப்பு, வாழ்க்கை போராட்டம்!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement