Advertisement

200 பேர் சேர்ந்து தயாரிக்கும் படம்!

கொரோனா முடக்கிப்போட்ட தமிழ் சினிமாவை மீட்டெடுக்க பலர் களத்தில் குதித்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன் புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

ரூ.2 கோடி பட்ஜெட்டில் புதிய படம் ஒன்றை எடுக்க அவர் திட்டமிட்டுள்ளார். இந்த படத்திற்கு மொத்தம் 200 தயாரிப்பாளர்கள். ஒவ்வொருவரும் தலா ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். திரைத்துறையை சேர்ந்தவர்கள் மட்டுமே இதில் தயாரிப்பாளராக முடியும். படத்தின் வியாபாரத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய பங்கு பிரித்து தரப்படும்.

இந்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடிக்கிறார். அவருடன் பார்த்திபனும் இணைந்துள்ளார். இந்த படத்தில் நடிக்கும் அனைவருக்கும் வியாபாரத்தின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். இவை அனைத்தும் முறையாக வங்கி பரிவர்த்தனை மூலம் மட்டுமே செயல்படுத்தப்படும்.

முக்கியமாக இந்த படம் முதலில் தியேட்டரில் தான் ரிலீஸ் செய்யப்படும். 10 வாரங்கள் அல்லது 100 நாட்களுக்கு பிறகு தான் படம் ஓடிடி, டிவி உள்ளிட்ட தளங்களில் வெளியாகும். அதேபோல் தியேட்டரில் எத்தனை டிக்கெட்டுகள் விற்பனையாகிறது என்பதை கணினி மூலம் அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்படும் என திருப்பூர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

பொன்மகள் வந்தாள் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிடுவதால் ஏற்பட்டுள்ள பிரச்சினையை அடுத்து இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. வியாபாரத்தின் அடிப்படையில் சம்பளம் எனும் முடிவுக்கு பெரிய நடிகர்கள் எந்தளவுக்கு ஒத்துழைப்பு வழங்குவர் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Advertisement
 

வாசகர் கருத்து (14)

 • charan -

  orupatamadri

 • skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா

  இம்பாஸிபிள்ன்னு சொல்லுறாங்க பாசிபிள் னு சொல்றாங்க எப்படியோ எந்த நடிகனுக்கு கொடியே வாரி வழங்கவே கூடாது அவாளுக்கு கண்டபடியும் காசுத்தற முடியுமே என்று ஒருசிலர் முனகுவாங்க கதை நன்னாயிருக்கவேண்டும் அவ்ளோதான்

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  நல்ல முயற்சி. அனைவருக்கும் தலா ஒரு லட்சம் நஷ்டத்தோடு முடியும். கதாநாயகி நிலைதான் பாவம். படப்பிடிப்பு ஒருவருடம் நடந்தால்தான் சமாளிக்க முடியும்.

 • Covim-20 - Soriyaar land,இந்தியா

  200 பேர் கூட இந்தப்படத்தை பாக்கப்போறதில்லை...

 • PANDA PANDI - Aththipatti,இந்தியா

  உச்ச நடிகர் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும். ஏன் என்றால் சம்பளம் அதிகம் வாங்கும் நபர்..அரசியல் சாக்கடையில் குதிப்பத்திற்கு முன்பு ஆதரவு தந்து தப்பித்துக்கொள்ளலாமே. விரைவில் நாக்பூரில் இருந்து உத்தரவு வாங்கிவிடவும். ONE NATION ONE SALARY.

 • naadodi - Plano,யூ.எஸ்.ஏ

  This is called crowd funding...a process western world is doing already..

 • Rangiem N Annamalai - bangalore,இந்தியா

  நல்ல முயற்சி .உண்மையாக நடந்தால் பெரும் வெற்றி அடையும் .ஆர்வமுள்ள பொது மக்களை இணைக்கலாம் .திரை துறை உயிர்ப்புடன் இருக்கும் .நேர்மை முக்கியம் .வாழ்த்துக்கள் .

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  கருப்புப்பணத்தை வெளுக்குறதுக்குன்னே படம் எடுக்கும் ஒரு அண்ணாச்சி மூஞ்சை சேர்த்துக்குங்க. படம் ஓஹோன்னு ஓடும்.

 • unmaitamil - seoul,தென் கொரியா

  ஆண்டிகள் சேர்ந்து மடம் கட்டிய கதைதான் ??? போட்டி பொறாமையின் உச்சம்தான் சினிமா துறை. பொய்மையும் துரோகமும் நிறைந்த பொய்யான நிழல் உலகம், இந்த சினிமா. வெற்றி பெற வாய்ப்பே இல்லை.

 • பாலமுருகன் - ,

  இந்த முயற்சி நல்லதுதான், ஆனால் தொடர வாய்ப்பு இல்லை.

 • வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா

  பாவம் ஹீரோயின்

  • அருணாசலம், சென்னை - ,

   அர்த்தம் புரிந்தது.

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

   கதையும் கச்சிதமா வரும். அர்த்தம் புரியுமே..

 • Muthu Kumar - Manama,பஹ்ரைன்

  நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement