dinamalar telegram
Advertisement

மறக்க முடியுமா? - சிகப்பு ரோஜாக்கள்

Share
மறக்க முடியுமா? - சிகப்பு ரோஜாக்கள் Entertainment பொழுதுபோக்கு

படம்: சிகப்பு ரோஜாக்கள்
வெளியான ஆண்டு: 1978
நடிகர்கள்: கமல், ஸ்ரீதேவி
இயக்கம்: பாரதிராஜா
தயாரிப்பு: ஜே.பத்மாவதி

இயக்குனர், பாரதிராஜாவின் முதல் படம், 16 வயதினிலே; அடுத்த படம், கிழக்கே போகும் ரயில். இந்த இரண்டு படங்களும், கிராமத்து, சப்ஜெக்ட் என்பதால், பாரதிராஜாவுக்கு, கிராமத்து படங்கள் தான் எடுக்கத் தெரியும் என, கோலிவுட்டில் பேச்சு கிளம்பியது. இதையடுத்து, கமல், ஸ்ரீதேவியுடன், அட்டகாசமான, சிட்டி ப்ளஸ் க்ரைம் த்ரில்லர் கதையை உருவாக்கினார், பாரதிராஜா. அது தான், சிகப்பு ரோஜாக்கள்!

இளம் வயதில், பெண்களால் பாதிக்கப்பட்ட, ஒரு சைக்கோ கில்லர் பற்றிய கதை இது. பெண்களை காதலித்து, அவர்களை கொலை செய்யும் கதாபாத்திரம், கமலுக்கு. அப்போது, திரையுலகில் காதல் இளவரசானாக இருந்த, கமலுக்காகவே உருவாக்கப்பட்ட கதாபாத்திரம். கமல், ஒரு சைக்கோ என தெரிந்த பின், ஸ்ரீதேவியின் நடிப்பு, பிரமிப்பாக இருக்கும். தன் கண்களாலேயே, பதைபதைப்பையும், படபடப்பையும் ரசிகர்களுக்கு கடத்தியிருப்பார்.

இப்படத்தில், சிவப்பு ஆப்பிள் ஆங்காங்கே குறியீடாக பயன்படுத்தப்பட்டிருக்கும்; கவனித்திருக்கிறீர்களா?இத்திரைப்படம், 175 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது.

பிலிம்பேர் விருதை, சிறந்த நடிகருக்காக, கமலும்; இயக்குனருக்காக, பாரதிராஜாவும் பெற்றனர். இப்படம், தெலுங்கில், ஈரா குலாபிலு எனும் பெயரில், மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. ஹிந்தியில், ரெட் ரோஸ் எனும் பெயரில், ராஜேஷ் கன்னா நடிப்பில், இயக்குனர் பாரதிராஜாவே, ரீமேக் செய்தார். இப்படத்திற்கு, இளையராஜாவின் பின்னணி இசை, மிரட்டலாக அமைந்திருந்தது. படத்தில் இரண்டே பாடல்கள். நினைவோ ஒரு பறவை... பாடல், நம்மை இன்றும் மெய்மறக்கச் செய்கிறது.இப்போது, பாரதிராஜா தயாரிக்க, அவரது மகன் மனோஜ், சிகப்பு ரோஜாக்கள் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறாராம்... பயமாக இருக்கிறது!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement