dinamalar telegram
Advertisement

நீலிமா ராணியின் என்றென்றும் புன்னகை

Share
நீலிமா ராணியின் என்றென்றும் புன்னகை Entertainment பொழுதுபோக்கு

சின்னத்திரை நட்சத்திரமான நீலிமா ராணி, தென்னிந்திய மொழிகளில் 36 தொடர்களில் நடித்தவர். 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சின்னத்திரை தயாரிப்பாளர் ஆனார். நிறம் மாறாத பூக்கள் என்ற தொடரை தயாரித்தார். இது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பானது.
தற்போது அதே ஜீ தமிழ் சேனலுக்காக அவர் தயாரிக்கும் தொடர் என்றென்றும் புன்னகை. ஜீவா, ஆண்ட்ரியா, த்ரிஷா நடித்த என்னென்றும் புன்னகை படத்தின் டைட்டிலையும். டிசைனையும் அப்படியே பயன்படுத்தியிருக்கிறர்.

ரேடியோ ஜாக்கியாக வேலை செய்து கொண்டே சுதந்திர பறவையாக இருக்கும் ஒரு பெண்ணை குடும்ப வாழ்க்கைக்குள் வலிந்து திணிப்பதும், அதை எதிர்த்து அவள் போராடுவதும் தான் கதை. இதில் ரேடியோ ஜாக்கியாக நட்சத்திரா நடிக்கிறார். அவரது காதல் கணவனாக தீபக் நடிக்கிறார். இந்த தொடர் கடந்த திங்கட்கிழமை முதல் (16ந் தேதி) ஒளிபரப்பாகிறது. வாரம்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 3 மணிக்கு ஒளிப்பரப்பாகிறது.

இந்த தொடர் தயாரிப்பு பணிகளை செய்வதற்கு வசதியாக நீலிமா ராணி, தான் நடித்து வந்த அரண்மணை கிளி தொடரில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement