Advertisement

ரம்யா கிருஷ்ணன் இடத்தை நிரப்பும் வரலட்சுமி

‛போடா போடி' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் வரலட்சுமி. தொடர்ந்து, ரொமான்டிக் நாயகியாகத்தான் நடிப்பேன் என்று இல்லாமல் வில்லி, கதையின் நாயகி என மாறுபட்ட வேடங்களில் நடித்து வருகிறார் வரலட்சுமி.

இதுபற்றி அவர் கூறுகையில், என்னைப் பொருத்தவரை நடிப்பு என்று வந்து விட்டால் எல்லாம் ஒன்று தான். என்னை எந்தமாதிரியான கோணத்தில் இயக்குனர்கள் வெளிப்படுத்த விரும்புகிறார்களோ அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கிறேன். மற்றபடி வில்லியாக நடிப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. ரம்யா கிருஷ்ணனுக்குப் பிறகு அந்த மாதிரி அதிரடி வேடங்களில் நடிக்க ஆள் இல்லை. அதனால் தொடர்ந்து வில்லியாக நடிப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. வில்லியாக மட்டும் தான் நடிக்க வேண்டும் என்றும் நான் விரும்பவில்லை. மாறுபட்ட கதையின் நாயகியாக நடிக்கவும் ஆசைப்படுகிறேன். அந்த கோணத்தில் தான் இப்போது கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன் என்கிறார் வரலட்சுமி.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • LAX - Trichy,இந்தியா

    'ரம்யா கிருஷ்ணன் இடத்தை நிரப்பும் வரலட்சுமி..' - Superb.. Varu.. All the Best..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement