Advertisement

'டப்பிங்' விவகாரத்தில் நடந்தது என்ன?

தயாரிப்பாளர் கிஷோர் என்பவர், தான் தயாரித்த மணி படத்தில் நடித்த யோகிபாபு, டப்பிங் பேச மறுப்பதாக சமீபத்தில், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து, யோகிபாபுவிடம் கேட்டபோது, ''அப்படத்திற்காக டப்பிங் பேசி, 90 சதவீத பணிகளை முடித்துவிட்டேன். இந்நிலையில், கிஷோர் நிறைய பிரச்னைகள் செய்தார். காவல் துறையில் புகார் அளிக்கப்படவே, தலைமறைவானார். ''பின் மீண்டும் வந்து, ஆரம்பத்தில் இருந்து டப்பிங் பேச வேண்டும் என்றார். நான் பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துள்ள நிலையில், நாட்கள் ஒதுக்க முடியவில்லை. ஆக, கிஷோர் மீது தான் தவறு உள்ளது,'' என, தெரிவித்துள்ளார்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    காசு வந்திடுச்சு பின்ன என்ன , ஏறிய ஏணியை எட்டி உதைக்கத்தான் செய்வார்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement