Advertisement

மறக்க முடியாத நாட்கள்: பிரியா

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வளர்ந்து வருகிறார் பிரியா பவானி சங்கர். சமீபத்தில் மாபியா படத்தில் நடித்திருந்தார். மென்மையான கதாபாத்திரங்களில் இருந்து அதிரடியான ஆக்ஷன் காட்சிகளிலும் நடிக்கத் துவங்கி இருக்கிறார்.

இந்த நிலையில் நடிகர் ஹரீஷ் கல்யாண் ஜோடியாக புதிய திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார். பெல்லி சூப்புலு தெலுங்கு திரைப்படத்தின் தமிழ் ரீ மேக் ஆக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ளார்.

பிரியா டுவிட்டரில், மிகவும் ஜாலியான படப்பிடிப்பு முடிந்து விட்டது. அழகான தருணங்களையும் அன்பையும் பகிர்ந்த உங்கள் அனைவரையும் நான் மிஸ் செய்வேன். இது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள். உங்கள் அனைவரையும் விரைவில் மீண்டும் சந்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement