Advertisement

திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்த துல்கர் சல்மான்

நடிகர் துல்கர் சல்மான் நடிக்க ஆரம்பித்து, எட்டு வருடங்கள் ஆகிவிட்டன. இந்த காலகட்டத்தில் கமர்ஷியல் அம்சம் கொண்ட படங்களில் நடிப்பதை விட, நடிப்புக்கு தீனி போடும் விதவிதமான கதாபாத்திரங்களையே அவர் தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை. அதேசமயம் தன்னை தேடிவந்த திருநங்கை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு மறுத்துவிட்டதாக சமீபத்தில் அவரே வெளிப்படுத்தியுள்ளார்.

ஒரு பேட்டியில், சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய்சேதுபதி நடித்த திருநங்கை கதாபாத்திரம் பற்றி துல்கர் சல்மானிடம் கேட்டபோது, தன்னையும் திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு ஒன்று தேடி வந்ததாக கூறினார். அதுபற்றி அவர் மேலும் கூறும்போது, “சில விஷயங்களை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதமாக நம்மால் திருப்தியாக செய்ய முடியும் அல்லது முடியாது என்பது ஒரு நடிகராக நமக்கு நன்றாகவே தெரியும்.. முதலில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முன்பாக நான் என்னிடம் ஒளிந்துள்ள பெண் தன்மையை கொஞ்சமாவது வெளிப்படுத்த வேண்டும்” என கூறியுள்ளார் துல்கர் சல்மான்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement