Advertisement

மோகன்லால் படத்தை எதிர்த்து மனு: ஒதுங்கிய நீதிமன்றம்

ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் வரலாற்று படம் 'மரைக்கார் ; அரபிக்கடலிண்டே சிம்ஹம்'. பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த குஞ்சாலி மரைக்கார் என்கிற கடற்படை வீரர் பற்றிய வரலாறாக உருவாகியுள்ள இந்தப்படம், வரும் மார்ச் 26 ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்தநிலையில் குஞ்சாலி மரைக்காயரின் சந்ததியை சேர்ந்தவர் எனக் கூறிக்கொண்டு ஒருவர் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என கேரள உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்..

“குஞ்சாலி மரைக்காயரின் குடும்ப உறுப்பினர்களின் பெருமைக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக இந்தப்படம் உருவாகியுள்ளது. மேலும் இந்தப்படம் வெறுப்பை பரப்புவதாகவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது.. எனவே இந்த படத்தை தடை செய்ய வேண்டும்” எனவும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்

இந்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், “இதுபோன்ற திரைப்பட ரிலீஸ் பிரச்சனையில் நீதிமன்றம் தலையிடாது என்று கூறிவிட்டது. அதுமட்டுமல்ல ஏற்கனவே இந்த படத்தை தணிக்கை செய்த சென்சார் போர்டு, இந்த படத்தில் எந்த காட்சிகளையும் வெட்ட வேண்டியதில்லை என்றும் இதனால் தேவையில்லாத சர்ச்சைகள் ஏற்படாது என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • a natanasabapathy - vadalur,இந்தியா

    Sattam maanilsthukku maandilam verupadukirathu thamizhnaattil thoytatherkku yellaam neethi maram thalaiyittu pada veliyeetai thalli vaikkinrranar keralaavil othungki kolkinranar yenna sattamo

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement