Advertisement

தபுவை விலக்கிய அந்தாதுன் தெலுங்கு ரீமேக் படக்குழு

இந்தியில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்த அந்தாதூன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.. மூன்று தேசிய விருதுகளை அள்ளிய இந்த படம் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. தமிழில் நடிகர் பிரசாந்த் நடிக்க இருக்கிறார். இந்தநிலையில் இதன் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் நிதின் நடிக்க இந்த படத்தை மேர்லபகா காந்தி இயக்கவுள்ளார்.

இந்தியில் தபு நடித்த கதாபாத்திரத்தில் மீண்டும் அவரையே ஒப்பந்தம் செய்ய சென்ற தயாரிப்பாளரிடம் ஒரு கோடி ரூபாய் சம்பளமாக கேட்டு மிகப்பெரிய அதிர்ச்சி அளித்துள்ளார் தபு. இதனால் அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளர் ஒரு சீனியர் நடிகைக்கு இந்த சம்பளம் ரொம்பவே அதிகம் எனக் கருதியதால் அவருக்கு பதிலாக சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த அனசுயா பரத்வாஜ் என்கிற நடிகையை 10 லட்சம் சம்பளத்திற்கு ஒப்பந்தம் செய்து விட்டாராம்.

சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'அல வைகுண்டபுரம்லோ' என்கிற படத்தின் மூலம் தெலுங்கில் ரீ என்ட்ரி கொடுத்து இருந்த தபு, அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது சம்பளத்தை மிகப்பெரிய அளவில் உயர்த்தி விட்டதாக சொல்லப்படுகிறது.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • meenakshisundaram - bangalore,இந்தியா

    தபு தேவை இல்லாதான் ,முற்றிய தோற்றம் வந்து ரொம்ப நாளாச்சு இளம் நடிகர்களே தேவலாம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement