Advertisement

செக் மோசடி: பிரகாஷ்ராஜிற்கு சம்மன்

நடிகர் பிரகாஷ்ராஜ், ‛தோனி, உன் சமையல் அறையில்' போன்ற படங்களை தானே தயாரித்து, நடித்திருந்தார். உன்சமையல் அறையில் படத்தை ஹிந்தியில் தடிகா என்ற பெயரில் தயாரித்து, இயக்கினார். இதற்காக பாலிவுட் பைனான்சியர் ஒருவரிடம் பிரகாஷ்ராஜ் ரூ.5 கோடி கடன் பெற்றதாகவும், அதையடுத்து அவர் அதற்கான செக்கை கொடுத்துபோது அது பணமின்றி திரும்பிவிட்டதாக தெரிகிறது. அதனால் அந்த பைனான்சியர் பிரகாஷ்ராஜ் மீது சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதி வருகிற ஏப்ரல் 2ல் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி பிரகாஷ்ராஜிற்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Narayanan.S - Chennai,இந்தியா

    இவுங்கயெல்லாம் நாட்டை திருத்த ....... வேறுஎன்ன சொல்ல புரிந்தால் சரி .....

  • vns - Delhi,இந்தியா

    மோசடி மன்னர்கள் மக்கள் சேவை செய்கிறார்கள்.

  • Sharvintej - madurai,இந்தியா

    சமூக போராளிகள் அனைவரும் பின்னணியும் இது தான் போல .. (மோசடி ) உதாரணம் பியூஸ் மனுஷ் , பிரகாஷ் ராஜ் ..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement