Advertisement

போலீஸ் பாதுகாப்புடன் திரௌபதி படம் அரசியல் தலைவர்களுக்கு திரையீடு

கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் சாதி பின்னணி கொண்ட படங்கள் அதிகம் வருகின்றன. அவை ஆண்ட பரம்பரை, அடிமைப் பரம்பரை என்ற கருத்தியல் ரீதியில் வெளிப்படையாக அமைவதால் சமூக வலைத்தளங்களில் அந்தப் படங்களைப் பற்றி கடும் விவாதம் எழுந்தன. நாளை வெளிவர உள்ள திரௌபதி படம் அப்படி ஒரு சர்ச்சையை, டிரைலர் வெளியீட்டின் போதே ஏற்படுத்தியது.

அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட், ஷீலா உட்பட பலர் நடித்துள்ள இப்படத்தை மோகன் ஜி இயக்கி உள்ளார். ஒரு குறிப்பிட்ட சாதியின் அடையாளமாக இந்தப் படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் ஆணவக்கொலை பற்றியது என்கிறார்கள். இதனால் மோதல் வருமோ என்றெல்லாம் கூட சிலர் அச்சப்படுகிறார்கள்.


இந்நிலையில் இப்படத்தின் பிரத்யேக காட்சி, சென்னை பிரசாத் லேப்பில் போலீஸ் பாதுகாப்பு உடன் அரசியல் பிரமுகர்களுக்கு திரையிடப்பட்டுள்ளது. அதன்படி இன்று(பிப்.,27) நடந்த காட்சியில் பா.ஜ.,வின் எச்.ராஜா, அர்ஜுன் சம்பத் உள்ளிட்டவர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. இவர்களுடன் கே.ராஜன், டி.எஸ்.ஆர்.சுபாஷ் ஆகியோரும், பத்திரிக்கையாளர்களும் படத்தை பார்த்தனர்.

Advertisement
 

வாசகர் கருத்து (10)

 • Tamil - chennai,இந்தியா

  ஜாதி வெறி பிடிச்சவர்கள் இன்னும் ஒரு சிறு வட்டத்திற்குள் வாழ்ந்து கொண்டு மடத்தனமாக செயல்படுகிறார்கள். காதல் என்பது இயற்கை அதை தடுக்க மனிதனால் முடியாது. ஒரு பெண் வயதுக்கு வருவதே அந்த பெண் குழந்தை பெறுவதற்கு தயாராகி விட்டால் என்பதை இயற்கை உணர்த்துகிறது. வயது வந்துவிட்டால் குழந்தை பிறக்க வைக்க ஹார்மோன்ஸ் தன் வேலையை செய்கிறது. ஹார்மோன்ஸ் செயல்பாட்டால் பெண்கள் காதல் வயப்படுகிறார்கள். அதில் நல்லவரா கெட்டவனா எந்த ஜாதி மதம் இனம் என்பது அவர்கள் ஹார்மோன்ஸ் பார்க்காது. ஹார்மோன்ஸ் வேலை குழந்தை உற்பத்தி செய்வது. திருமணம் மனிதனால் உருவாக்கபட்டது. உயிரினங்கள் அனைத்தின் வேலை மறு உயிரை உருவாக்கி பின்பு குறிப்பிட்ட காலத்திற்குள் அழிவது. . அது மனிதனுக்கும் பெரும்தும். இது சயின்ஸ்இயற்கை. ஜாதி மதம் இனம் எல்லாம் மனிதன் உருவாக்கியவை. ஒருவருக்கு யாரை பிடிக்கும் என்பதை தீர்மானிப்பது சம்பந்தப்பட்டவரால் மட்டுமே முடிவெடுக்க முடியும். அதையும் மீறி செய்யும் பல திருமணம் கணவன் அல்லது மனைவி உயிரை பறித்துவிட்டு கள்ள காதல் கொண்டு ஒட துணிகின்றனர். நீரோடை ஆறுகளை அனை கட்டி தடுக்கலாம் காட்டாறு வெள்ளத்தில் அனை எல்லாம் தவிடுபொடிய ஆகிவிடும். அது போல் தான் ஒரு பெண்களின் திருமணமும் இதற்கு தன் பழையகாலத்தில் மாமன் மகன் முதலில் அத்தை மகள் என்று முதலிலே சொல்லிவைத்து வளர்ப்பார்கள். பருவம் வந்ததும் திருமணம். எனக்கு ஜாதி தான் முக்கியம் என்பவர்கள் பழையகாலத்தை பின்பற்றுவது நல்லது . அதுவும் அந்த பெண்ணுக்கு அல்லது இளைஞனுக்கு சொந்தத்தில் மனதிற்கு பிடிக்காவிட்டால் மறுபடியும் அது கள்ள காதலில் சென்று முடிய அதிக வாய்ப்பு உண்டு. தாழ்ந்த ஜாதியோ உயர்ந்த ஜாதியோ ஒரேய ஜாதி சேர்ந்த பணக்காரனுக்கு அதே ஜாதி ஏழைக்கு திருமணம் செய்து கொடுப்பானா ? இவ்வளவு ஏன் ஒரு ஒரு ஜாதிக்கும் ஒரு தலைவர் இருக்கிறான் அவன் அவனுடைய ஜாதி சேர்ந்த வசதி அற்ற ஏழைக்கு திருமணம் செய்து கொடுப்பானா ??? ஜாதி மதம் இவை இல்லாத இடத்தில கெட்டவர்கள் வாழ முடியாது. இதை வைத்துதான் உலகம் முழுவதும் 1 % பணக்காரன் 99 % நடுத்தர மற்றும் ஏழைகளை அடிமைப்படுத்தி உள்ளார்கள். திருந்துங்க கொஞ்சமது. பாஹுபலி வரும் காட்டுமிராண்டி கூட்டம் போல தான் மனதளவில் உணர்ச்சிவசப்பட்டு ஜாதி வெறியில் இருக்கிறார்கள் அனைவரும் குரங்கின் பின்வழியாக பிறந்தவர்கள் இதில் நான் உயர்ந்தவன் தாழ்ந்தவன் போட்டி வேற. .

 • skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா

  எந்த அரசியல்வியாதிக்கும் கலைஉணர்வெகிடையாது என்பதுதான் உண்மை

 • துயில் விரும்பி - coimbatore,இந்தியா

  இதுக்கு தமிழ் திரையுலகத்தினர் அரசு அனுமதி பெற்று தொழில் செய்யலாம்

 • J.Isaac - bangalore,இந்தியா

  நாடு உருப்படவேண்டும் என்றால் அரசியல் வியாதிகள் ஒழிக்கப்படவேண்டும்

 • Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  என்ன நடக்குது நாட்டில்

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  மகா கேவலமான முன்னுதாரணம்...பின்பு சென்சார் போர்ட் எதுக்கு?

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  அதென்ன ரஞ்சித் படம் எடுத்தால் நேரிடையாக வெளியாகிறது , மற்றவர்கள் எடுத்தால் சர்ச்சையாகிறது. இதுதான் கருத்து சுதந்திரமா

 • Barathan - chennai,இந்தியா

  அரசியல் வியாதிகளுக்கு படம் போட்டு காட்டி certificate வாங்கி படம் போட வேண்டிய அளவுக்கு வந்து விட்டது போல தமிழ் சினிமா நிலைமை கொடுமை இதுக்கு அந்த டைரக்டர் படம் எடுக்காமலேயே இருக்கலாம்

 • saravanan Rajan -

  வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • vijay -

   mass

கருத்தைப் பதிவு செய்ய

  மேலும் செய்திகள் :

Advertisement