Advertisement

இந்தியன் 2 விபத்து: விசாரணையில் ஷங்கர்

இந்தியன் 2 விபத்து தொடர்பாக இயக்குநர் ஷங்கர் இன்று, மத்திய குற்றப் பிரிவு போலீசாரின் விசாரணைக்கு சென்று வந்திருக்கிறார். கடந்த பிப்ரவரி 19ல், சென்னையை அடுத்த பூந்தமல்லியில் ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் நடந்த இந்தியன் 2 படப்பிடிப்பின் போது கிரேன் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் மூவர் உயிரிழந்தனர். இதையடுத்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கிரேன் ஆபரேட்டர் ராஜன் கைது செய்யப்பட்டார். பின், ஜாமினில் வெளி வந்திருக்கிறார்.

சம்பவ இடத்தில், விபத்து நடப்பதற்கு சில விநாடிகளுக்கு முன், நடிகர் கமலும், இயக்குநர் ஷங்கரும் அந்த இடத்தில் இருந்து சென்றுள்ளனர். இதையடுத்து, விபத்து எப்படி நடந்தது என்பது குறித்தும், விபத்து நடக்காமல் இருக்க என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கையெல்லாம் எடுக்கப்பட்டது என்பது குறித்தும், நடிகர் கமல் மற்றும் இயக்குநர் ஷங்கரிடம் விசாரணை நடத்த, சென்னை மாநகர போலீசின் மத்திய குற்றப் பிரிவு போலீசார் முடிவெடுத்தனர்.

இதற்காக, விசாரணைக்கு வரச் சொல்லி, இயக்குநர் ஷங்கருக்கு சம்மன் அனுப்பினர். அதையடுத்து, இயக்குநர் ஷங்கர் இன்று, மத்திய குற்றப் பிரிவு போலீசின் துணை ஆணையர் நாகஜோதி முன், விசாரணைக்கு ஆஜரானார். படப்பிடிப்புக்காகப் பிரம்மாண்டமாகப் போடப்பட்ட செட் மற்றும் அங்குப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின் படப்பிடிப்பு தொடங்கியதா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் ஷங்கரிடம் கேட்கப்பட்டு பதில் பெறப்பட்டதாக தெரிகிறது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

    மேலும் செய்திகள் :

Advertisement