Advertisement

பார்க்க முடியாத படமாக வரப் போகும் 'பல்லு படாம பாத்துக்க'

'ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து' போன்ற ஆபாச, இரட்டை அர்த்தப் படங்கள் வெளிவந்து வசூலை ஈட்டியதைத் தொடர்ந்து அந்த சமயத்திலேயே அறிவிக்கப்பட்ட படம் தான் 'பல்லு படாம பாத்துக்க'.

தற்போது இந்தப் படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார்கள். டீசரின் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை வெறும் இரட்டை அர்த்த வசனங்கள் மட்டுமே உள்ளன. அட்டகத்தி தினேஷ், சஞ்சிதா ஷெட்டி, ராஜேந்திரன், ஷாரா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் இது. விஜய் வரதராஜ் இயக்கியிருக்கிறார்.

சினிமாவில் அறிமுகமாகும் பல புதுமுக இயக்குனர்களுக்கு பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம், ஷங்கர் போல ஆக வேண்டும் என ஆசைப்படுவார்கள். இந்தப் படத்தின் இயக்குனருக்கு முதல் வரியில் இடம் பெற்ற படங்களை இயக்கிய சந்தோஷ் பி. ஜெயக்குமார் போல ஆக வேண்டும் என்ற ஆசை போலிருக்கிறது.

சென்சாரிலிருந்து இந்தப் படம் தப்பிக்குமா அல்லது நான்கு, ஐந்து 'ஏ' சேர்த்துக் கொடுத்து வெளியிடுவார்களா என்பதை சென்சார் அதிகாரிகள் தான் முடிவு செய்ய வேண்டும். பத்து ஏ சான்றிதழ் கொடுத்தால் கூட தப்பில்லை. அப்படியே கொடுத்தாலும், பத்து 'ஏ' சான்றுடன் வரும் முதல் படம் 'பல்லு படாம பாத்துக்க' என விளம்பரம் செய்தாலும் செய்வார்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    தணிக்கை அதிகாரிகள் காட்டில் கோடைமழை

  • Jayvee - chennai,இந்தியா

    சென்சார் அதிகாரிகளுக்கு நல்ல வருமான வேட்டை போல .. இதுல சைமன் செபாஸ்டியனை ஹீரோவா போட்டிருந்தா பொருத்தமா இருந்திருக்கும்

  • VSK - CARY,யூ.எஸ்.ஏ

    நீங்க பண்ற விளம்பரமே போதுமே

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement