Advertisement

பையனூரில் திரைப்பட தொழிலாளர்களுக்கு 6 ஆயிரம் வீடுகள்: ஆர்.கே.செல்வமணி தகவல்

சென்னை அருகே உள்ள பையனூரில் திரைப்பட நகரம் அமைக்க தமிழக அரசு 65 ஏக்கர் நிலம் ஒதுக்கி கொடுத்தது. இதில் 15 ஏக்கரில் 22 ஸ்டூடியோக்களும், 50 ஏக்கரில் தொழிலாளர்களுக்கு வீடுகளும் கட்ட திட்டமிடப்பட்டது. முதல் கட்டமாக தற்போது 2 ஸ்டூடியோக்கள் கட்டப்பட்டு வருகிறது. அடுத்து வீடு கட்டும் பணி தொடங்குகிறது.

இது குறித்து பெப்சி தலைவர் ஆர்.கே.செல்மணி நிருபர்களிடம் கூறியதாவது: 50 ஏக்கரில் திரைப்பட தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் பணி இந்த மாத இறுதியில் தொடங்குகிறது. அடிக்கல் நாட்டு விழாவிற்கு முதல்வரை அழைக்க இருக்கிறோம். மொத்தம் 6 ஆயிரம் வீடுகள் கட்டப்படுகிறது. 500 சதுர அடி முதல் 2000 சதுர அடி வரை இந்த வீடுகள் இருக்கும். முதல் கட்டமாக ஆயிரம் வீடுகள் கட்டும் பணி தொடங்குகிறோம். அது வெற்றிகரமாக முடிந்த பின் மற்ற வீடுகளையும் கட்டுவோம். திரைப்படத் தொழிலாளர்களின் 25 ஆண்டு கனவு நிறைவேறு நேரம் வந்து விட்டது. என்றார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement