Advertisement

வரதட்சணை கொடுமையால் கன்னட பின்னணி பாடகி தற்கொலை

வளர்ந்து வந்த கன்னட இளம் பின்னணி பாடகி சுஷ்மிதா. 26 வயதே ஆன சுஷ்மிதா வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த 18 மாதங்களுக்கு முன்பு சுஷ்மிதா, கம்ப்யூட்டர் என்ஜினீயர் சரத்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டு அவரது குடும்பத்தினருடன் பெங்களூருவில் உள்ள குமாரசாமி நகரில் வசித்து வந்தனர்.

கடந்த சில மாதங்களாக சரத்குமாரின் குடும்பத்தினர், சுஷ்மிதாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்த தொடங்கி உள்ளனர். இதனால் சுஷ்மிதாவுக்கும், அவரது கணவர் சரத்குமாருக்கும் அடிக்கடை சண்டை நடந்துள்ளது. இதனால் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய சுஷ்மிதா, அன்னபூர்னேஸ்வரி நகரில் உள்ள தாய்வீட்டுக்கு வந்து விட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, தனது தாய்வீட்டின் படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்னதாக தனது நெருங்கிய நண்பர்களுக்கு அவர் அனுப்பிய வாட்ஸ்-அப் தகவலில், தனது கணவரின் பெரியம்மா வைதேகி, சகோதரி கீதா ஆகியோர் வரதட்சணை கேட்டு தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், அதனால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும், தனது தற்கொலைக்கு கணவர் குடும்பத்தினர்தான் முழு காரணம் என்றும் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் அன்னபூர்னேஸ்வரி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து சரத்குமார் குடும்பத்தினரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Prasanna Krishnan -

    When we asked legally, you said we wont give to Tamil Nadu family. now enjoy . God has punished you

    • Yaro Oruvan - DUBAI

      .. இங்க வந்து ஒன்னோட குடும்ப விஷயத்தை கொஞ்சங்கூட விவஸ்தை இல்லாம வாந்தி எடுக்குற.. கடவுள் தண்டிச்சிட்டாராம்.. டேய் கடவுள் உன்னையும் பாத்துகிட்டு இருக்காரு மறந்துடாதே..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement