Advertisement

இதுபோன்ற ரசிகர்கள் இருந்தால் எனக்குத் தான் அவமானம் : சின்மயி

கடந்த சில நாட்களாகவே அஜித் ரசிகர்களும், நடிகை கஸ்தூரியும் டுவிட்டரில் கடுமையான வார்த்தைகளால் மோதி வருகிறார்கள். இந்த விசயத்தில் நடிகர் அஜித் தலையிட்டு அவரது ரசிகர்களை தடுத்து நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார் கஸ்தூரி.

பாடகி சின்மயி இதில் தலையிட்டு, ‛‛இங்கே ஆபாசமாக திட்டுவது. கற்பழிப்பு மிரட்டல் விடுத்தால் கூட யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். அதனால் உடனடியாக காவல்துறையில் புகார் அளியுங்கள். அப்போது தான் தடுத்து நிறுத்தப்படும்'' என்று கஸ்தூரியை கேட்டுக்கொண்டார்.

அதையடுத்து ஒரு ரசிகர், நாங்கள் அம்பேத்கரின் பிள்ளைகள். அதனால் ஒரு தனிப்பட்ட நபரின் தவறுக்காக கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஒருவரை இழிவாக பேசுவதை வன்மையாக கண்டிக்கிறேன். உங்கள் குரலின் ரசிகன் நான். ஆனால் நீங்கள் செய்வது சரியல்ல என்று..'' டுவிட்டரில் கூறியுள்ளார்.

இந்த ரசிகரின் டுவீட்டுக்கு பாடகி சின்மயி உடனடியாக பதில் கொடுத்துள்ளார். அதில், ‛‛உங்களை மாதிரி ஆம்பளங்கெல்லாம், நான் உத்தமியா? இல்லையான்னு சொல்ல தகுதி இருக்குதான்னு யாருக்குத் தெரியும். உங்களை மாதிரி அழுகிய வார்த்தைகளை பேசும் ரசிகர்களெல்லாம் என் குரலுக்கு ரசிகர் என்று சொன்னால் எனக்குத்தான் அவமானம்'' என்று பதிலடி கொடுத்துள்ளார் சின்மயி.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement