Advertisement

ரோட்டில் படுத்து உறங்கிய ரசிகர்: சந்தித்து ஆறுதல் கூறிய பூஜா

நடிகர் ஜீவா நடிப்பில் உருவான முகமூடி படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. தொடர்ந்து, தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்து வந்தார். குறைந்த படங்களில் நடித்திருந்தாலும் நாக சைதன்யா, ராம் சரண், அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு உள்ளிட்ட பல முன்னணி தெலுங்கு கதாநாயகர்களுடனும் அக்ஷய் குமார், ஹிரித்திக் ரோஷன் போன்ற பிரபல பாலிவுட் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் பூஜா.

இதனால், அவர் தனக்கென மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கி இருக்கிறார். அப்படி உருவான ஒரு ரசிகர் பாஸ்கர் ராவ். இவர், தெலுங்கு ரசிகர். தற்போது தற்போது மும்பையில் வசித்து வரும் பூஜாவை காணும் ஆவலில் அவர், ஆந்திராவில் இருந்து மும்பைக்குச் சென்றார். அங்கு, பூஜாவை காண்பதற்காக, அவர் பல முயற்சிகள் எடுத்தார்; முடியவில்லை. ஐந்து நாட்களாகியும் பூஜாவை பார்க்க முடியவில்லை. இருந்தாலும், அவரை பார்த்து விட்டுத்தான் ஊர் திரும்புவது என முடிவெடுத்து, மும்பை வீதிகளிலேயே படுத்து உறங்கினார் பாஸ்கர் ராவ்.

இதையறிந்ததும், பூஜா ஹெக்டே, வெறித்தனமான அந்த ரசிகரை சந்தித்து பேசுவது என முடிவெடுத்தார். பாஸ்கர் ராவை சந்தித்துப் பேசினார். அது தொடர்பான வீடியோவையும், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்திருக்கிறார்.

அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: பெரும் சிரத்தை எடுத்து, என்னைப் பார்க்க வந்த பாஸ்கர ராவுக்கு நன்றி. அவர் அனுப்பி இருக்கும் ஒவ்வொரு மெஸேஜ்களையும் நான் பார்த்திருக்கிறேன்; பார்த்தும் வருகிறேன். உங்களுடைய அன்பிற்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி. அதற்காக, விடாப்பிடியாக என்னை பார்த்துத்தான் ஆக வேண்டும் என சொல்லி, ரோட்டில் படுத்து தூங்குவதெல்லாம் கொஞ்சம் கூடுதலாகவே உணர்கிறேன். எனவே, தயவு செய்து, பாஸ்கர் ராவ் மட்டுமெல்ல; வேறு யாரும் இப்படி செய்யக் கூடாது. ஒவ்வொரு ரசிகரும் எனக்கு பலம். அதை நான் உணர்ந்திருக்கிறேன். ஒவ்வொருக்கும் என்னுடைய அன்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு பூஜா ஹெக்டே கூறியுள்ளார்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

    பயித்தியங்கள் பலவிதம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement