Advertisement

இப்ப வந்து மோதுடா; கிட்ட வந்து பாருடா - சூர்யா பாடல்

ஏற்கனவே அஞ்சான் படத்தில் 'ஏக் தோ தீன்' பாடலைப் பாடிய சூர்யா நீண்ட இடைவெளிக்குப் பின், சூரரைப் போற்று திரைப்படத்தில் மீண்டும் பாடியுள்ளார். அந்தப் படத்துக்காக, சூர்யா பாடியுள்ள மாறா என்னும் ராப் பாடலின் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில், சூர்யாவோடு, அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடித்துள்ளார். மோகன் பாபு, பரேஷ் ராவல், கருணாஸ், ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோரும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தை இறுதிச்சுற்று சுதா இயக்கி இருக்கிறார். இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையைத் தழுவி, இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் படத்தில் பைலட் ஆபீசர் நெடுமாறன் ராஜாங்கம் என்னும் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். இந்நிலையில் படத்தில் இடம்பெறும் மாறா என்னும் பாடலின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து, ராப் பாடல் வகையில் உருவாகியுள்ள இந்தப் பாடலை சூர்யாவே பாடியுள்ளார்.

இது தொடர்பாக, தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பகிர்ந்திருக்கும் வீடியோ பதிவில், இப்ப வந்து மோதுடா கிட்ட வந்து பாருடா கட்டறுந்த காளை நெஞ்சு மேல ஏறப் போகுதுடா என்னும் பாடல் வரிகளை சூர்யா பாடுவது போல பாடல் காட்சி இடம் பெற்றிருக்கிறது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement