Advertisement

காளிங்கராயன் வேடத்தில் கார்த்தி?

Share

கொங்கு பகுதியை வளப்படுத்தும் காளிங்கராயன் வாய்க்காலில், கடந்த பொங்கலுக்கு, குடும்பத்துடன் முளைப்பாரி எடுத்தார் நடிகர் கார்த்தி. அப்போது, நீர்நிலைகள் பாதுகாப்பு, விவசாயம் குறித்து அவர் பேசிய வீடியோ, வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், அக்கால்வாயை வெட்டிய காளிங்கராயன் வேடத்தில், கார்த்தி நடிக்க உள்ள தாக, தகவல் உலவுகிறது.இது குறித்து, வரலாறு தெரிந்த சிலர், 'முற்காலத்தில், கொங்கு பகுதியை ஆண்ட வீரபாண்டியனின், தலைமை அமைச்சரான காளிங்கராயன், அப்பகுதியில் நீர்வளத்தைப் பெருக்க, கால்வாய் வெட்டினார். அதை, 'காளிங்கராயர் கால்வாய்' என்றே, மக்கள் அழைத்தனர். திரைப்படங்களை விஞ்சும் சம்பவங்களைக் கொண்டது, காளிங்கராயர் வரலாறு' என்கின்றனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement