Advertisement

குடியை நிறுத்தினேன்; மீண்டு விட்டேன்: விஷ்ணு விஷால் உருக்கம்

நடிகர் விஷ்ணு விஷால், பல பிரச்னைகளுக்கு மத்தியில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியாது. அந்தப் பிரச்னைகளையெல்லாம், அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தின் மூலம், இப்போது வெளியுலகிற்கு அம்பலப்படுத்தி இருக்கிறார். ரசிகர்களுக்கான கடிதமான தன்னுடைய சங்கடங்களை எல்லாம் அவர் பட்டியலிட்டுக் கூறியிருக்கிறார். அவர் ரசிகர்களுக்கு எழுதி இருக்கும் கடிதத்தில் கூறியிருப்பதாவது:

அன்புள்ள ரசிகர்களுக்கு...

நான் என்னைப் பற்றிய சில தகவல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என்னுடைய இத்தனை ஆண்டுகால வாழ்க்கை பலரைப் போலவும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்த ஒன்றாகவே இருந்தது. ஆனால், கடைசி இரண்டு ஆண்டுகள் மிகுந்த கடினமான ஒன்றாகவும், இருள் நிறைந்த பகல்களும், இரவுகளும் நிறைந்ததாக இருந்தது. அவற்றைப் பற்றிப் பேசவேண்டிய நேரம் இதுவென கருதுகிறேன்.

என்னுடைய சினிமா வாழ்க்கையில் எல்லாம் சரியாக போய்க் கொண்டிருந்தபோது, என் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை சீரழிந்தது. 2017ல், நானும், என் மனைவியும் 11 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த வாழ்க்கையை முறித்துக் கொண்டோம். இரண்டு வீடுகளில் வாழ்ந்தது மட்டும் எனக்கு ஏற்பட்ட துயரமல்ல; பிறந்து, சில மாதங்களே ஆகியிருந்த என் மகனையும் நான் பிரிய நேர்ந்தது. என் வாழ்க்கை இப்படி மாறும் என நினைத்ததே இல்லை. குடிகாரனாக மாறினேன். ஒவ்வொரு இரவும், நான் உடைந்துபோகும் வரை குடித்தேன். அந்த நாட்கள் மோசமாக மாறின. மன அழுத்தமும் தூக்கமின்மையும் என்னை உடலளவில் நோயாளியாக மாற்றியது. சிறு அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.


மோசமான நாட்களில் படத்தை ரிலீஸ் செய்ய நிர்பந்திக்கப்பட்டேன். நான் உருவாக்கியிருந்த தயாரிப்பு நிறுவனம் நஷ்டத்துக்கு சென்றது. அதனால் பண நெருக்கடியும் ஏற்பட்டது. இதனால் என் சொந்த தயாரிப்பில் தயாரான திரைப்படத்தை 21 நாள் ஷூட்டிங்குக்குப் பின், கைவிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதையெல்லாம் விட, இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் நான் நடித்த காடன் திரைப்பட ஷூட்டிங்கின் போது, விபத்தில் சிக்கி இரண்டரை மாதம் கட்டிலில் கிடந்தேன். அதனால் 11 கிலோ எடை அதிகமானேன்.

ராட்சஸன் இல்லாமல் எட்டு சிறந்த இயக்குநர்களுடன் இணையக் காத்திருந்த கதைகள், என் கையைவிட்டுச் சென்றன. விவாகரத்து, குழந்தையிடமிருந்து பிரிந்தது, உடல் நோய், பண நெருக்கடி, காயம், குடி, உணவுப் பிரச்சினை மற்றும் என் எடை கூடியது என அடி மட்டத்துக்குச் சென்று விட்டேன். உதவ யாருமில்லாமல், ஏதோ ஒரு உலகத்தில் கிடப்பது போல இருந்தேன். அதனால், என் அப்பா ரிட்டையர் ஆனது கூட தெரியாமல் போனது. என் பிரச்னைகளில், நான் உழன்று கொண்டிருந்தது, என் குடும்பத்தையும், குறிப்பாக என் தந்தையை எப்படி பாதித்தது என்பதை நான் கவனிக்கவில்லை. அவரது கையறு நிலையைக் கண்டபோது, என் வாழ்க்கையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.

உதவி கேட்டுச் சென்றேன். மன அழுத்தத்தை சரி செய்ய சிகிச்சை மேற்கொண்டேன். எனக்குள் ஒரு சக்தி கிடைக்க உடற்பயிற்சியில் கவனம் செலுத்தினேன். சத்தான உணவுகளை உண்ணத் தொடங்கினேன். குடியை நிறுத்தினேன். யோகா செய்யத் தொடங்கினேன். முன் முடிவுகளோடு பழகுபவர்களை வாழ்க்கையிலிருந்து ஒதுக்கி வைத்தேன். எதிர்மறையாக சிந்திப்பவர்களை பிளாக் செய்தேன். வீட்டில் இருப்பவர்களுடன் அதிக நேரம் செலவிட்டேன். நேர்மறை எண்ணமுடைய நண்பர்களுடன் மட்டும் பழகத் தொடங்கினேன்.

காயம் ஏற்பட்ட பின், உடற்பயிற்சி செய்யவே கூடாது என்று சொன்னார்கள். ஆனால், நான் ஜிம்முக்குப் போனேன். முதல் நாள் என்னால் ஒரு புஷ்-அப் கூட எடுக்க முடியவில்லை. ஆனால், 6 மாதம் கழித்து இப்போது 16 கிலோ எடை குறைவாக வலிமையாக, எனது அடுத்த நான்கு படங்களுக்குத் தயாராகி விட்டேன். என்னைப் போலவே கஷ்டப்பட்டுக் கொண்டு பலர் இருக்கலாம். உங்களுக்கெல்லாம் நான் சொல்ல நினைப்பது ஒன்று தான். நாம் எப்போது வேண்டுமானாலும் திரும்பி எழலாம். நேர்மறையான சிந்தனைகளும், ஒழுக்கமும் உங்களைக் காப்பாற்றும்.

இவ்வாறு அவர், அந்த கடிதத்தில் கூறியிருக்கிறார்.

Advertisement
 

வாசகர் கருத்து (20)

 • Sri,India - India,இந்தியா

  மது போதைக்கு எதிராக இவரால் பிரச்சாரம் செய்ய முடியுமா?? இவர் படத்திலாவது மது போதைக்கு எதிராக பேசுவாரா??

 • vns - Delhi,இந்தியா

  நடிகன் என்றால் அது சிவாஜி மட்டுமதான்... விஷ்ணு விஷால் எல்லாம் கூத்தாடிகள்

 • skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா

  justlike that துவங்கும் இந்த பமனுஷனை எல்லாம் இலக்கச்செய்து மானம் மரியாதைக்கேட்டு வாழ்க்கையை தொலைச்சு மதிகெட்டு அலையவைக்கும்போது திருந்தர்வன் தான் மனுஷன் திருந்தாலே என்றால் நடைப்பிணம் தான் அவனுக்கு குடியை ஆளா க்கியபாதகங்களேகூடவிளக்கிடுவாங்க இது உண்மை , போதை ஏறினாள் செய்றா அநியாயம் எவ்ளோ கணக்கிலடங்காதுய்யா மனைவியும் (காதலிச்சு மணந்தாலும் )டிவோர்ஸ்லே முடியுதே இந்த குடியால் (டாஸ்மாக் நீரோ வெளிநாட்டுசிறுநீரோ )போதைக்குன்னுகுட்டிச்சு வாய்ருவெந்து சாவுதுங்களே

 • skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா

  மனம் திருந்தி வாழவரும் உனக்கு இனி எல்லாம் இனிதுதான் ஐயா

 • Dv Nanru - mumbai,இந்தியா

  குடியை நிறுத்தியினாய் சரி ஏன் சட்டை போடாமல் முண்டமாய் இருக்கிறாய் போயி சட்டையை போட்டுவா ... அது தான் நாகரிகம்..

  • skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா

   இப்படிக்காட்டினால் தனக்கு சான்ஸ் கிட்டுமோ என்ற ஒரு ஆசையேதான் காரணம் பொண்ணுகளே அசிங்கமாகாட்டிண்டு திரியுறாளுங்க சான்ஸ்கிட்டுமான்னு அதுபோலஇவனும் நிக்கிறான்

 • Praveen - Chennai,இந்தியா

  Interesting ... thanks for sharing ...

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  உங்க தந்தை ஒரு போலீஸ் டி ஜி பி அவரால்கூட தனது மகனை இப்படி சரிசெய்ய முடியாமல் போய்விட்டதே

 • Parthi -

  நேர்மறையான சிந்தனைகள்,ஒழுக்கம்,.....ஜுவெல் கட்டாவை திருமணம் செய்ய இப்படி sympathy செய்கிறார்..சொந்த மனைவியுடன் ஒழுக்கம் இல்லாததால் தான் இவருக்கு பிரட்சனை ஏற்பட்டு மனஅழுத்தம் வந்திருக்கும்.... தன் தவறை மறைக்க காரனம் சொல்கிறார்.... பாவம் அவரது மனைவி ரஜினி நடராஜன்....

 • Parthi -

  நேர்மறையான சிந்தனைகள்,ஒழுக்கம்,.....ஜுவெல் கட்டாவை திருமணம் செய்ய இப்படி sympathy செய்கிறார்..சொந்த மனைவியுடன் ஒழுக்கம் இல்லாததால் தான் இவருக்கு பிரட்சனை ஏற்பட்டு மனஅழுத்தம் வந்திருக்கும்.... தன் தவறை மறைக்க காரனம் சொல்கிறார்.... பாவம் அவரது மனைவி ரஜினி நடராஜன்....

 • Parthi -

  நேர்மறையான சிந்தனைகள்,ஒழுக்கம்,.....ஜுவெல் கட்டாவை திருமணம் செய்ய இப்படி sympathy செய்கிறார்..சொந்த மனைவியுடன் ஒழுக்கம் இல்லாததால் தான் இவருக்கு பிரட்சனை ஏற்பட்டு மனஅழுத்தம் வந்திருக்கும்.... தன் தவறை மறைக்க காரனம் சொல்கிறார்.... பாவம் அவரது மனைவி ரஜினி நடராஜன்....

 • Parthi -

  நேர்மறையான சிந்தனைகள், ஒழுக்கம்,.....ஜுவெல் கட்டாவை திருமணம் செய்ய இப்படி sympathy செய்கிறார்..சொந்த மனைவியுடன் ஒழுக்கம் இல்லாததால் தான் இவருக்கு பிரட்சனை ஏற்பட்டு மனஅழுத்தம் வந்திருக்கும்.... தன் தவறை மறைக்க காரனம் சொல்கிறார்.... பாவம் அவரது மனைவி ரஜினி நடராஜன்....

 • Thalaivar Rasigan - CHENNAI,இந்தியா

  ஒழுக்கம் இல்லாதவங்க மற்றவர்களுக்கு வாழ்க்கையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என போதிப்பார்கள்.

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  தனது வாழ்க்கை மாத்திரம் பாதித்தது என்று இல்லை அதனால்தான் 'குடி குடியை கெடுக்கும் 'என்று சொல்வார்கள்.மறைந்த மஃர் எத்தனையைப் பேர்களை இதிலிருந்து விளக்க சொல்லி காப்பாற்றியுள்ளார் ,அவரின் பிறந்த நாளை ஒட்டி அந்த இந்த செய்தி நல்லதே ,ஆனால் குடியை அறிமுகப்படுத்திவர்களை காலம் தண்டியாக்க வில்லையே ,அவர்கள் சேர்த்த சொத்துக்கள் 'அசிங்க' அரசியல் செய்ய உதவுகின்றதே ?என்ன செய்வது ?மக்கள் திருந்த வேண்டாமா?எத்தனை விஷால்களை உருவாக்க முடியும்?

 • sankar - new jersy,யூ.எஸ்.ஏ

  இதை எழுதியது யார் ???

 • Bala - Chennai,இந்தியா

  இதை சொல்றதுக்கு தைரியம் வேணும். வெரி குட். வாழ்த்துக்கள். சிவகார்த்திருக்கேயன் மாதிரி ஸ்டேஜ்ல அனுதாபத்தை வாங்காம உண்மையா சொன்னதுக்கு மிக்க நன்றி.

 • Bala - Chennai,இந்தியா

  இதை சொல்றதுக்கு தைரியம் வேணும். வெரி குட். வாழ்த்துக்கள். சிவகார்த்திருக்கேயன் மாதிரி ஸ்டேஜ்ல அனுதாபத்தை வாங்காம உண்மையா சொன்னதுக்கு நன்றி.

 • ARUN.POINT.BLANK -

  super bro... all the very best.. realization happens with in... in your ase it happened ... YOU STARTED WINNING BRO.. I AM HAPPY FOR YOU 🙏😀🙏

 • naadodi - Plano,யூ.எஸ்.ஏ

  பதிவிற்கு நன்றி விஷ்ணுவிஷால்ஜி மனம் திறந்த உங்களது பதிவு தளர்வுறுவோர்க்குத் தெம்பாக இருக்கும். Behind the success of every individual, several impediments & hurdles conceal உங்கள் எதிர்காலம் நலமுடன் சிறக்க வாழ்த்துக்கள்

 • naadodi - Plano,யூ.எஸ்.ஏ

  நேர்மறையான சிந்தனைதமிழ் தவறு நேர்மையான சிந்தனை என இருத்தல் வேண்டும்..எதிர்மறை, நேர்மை இரண்டும் opposite

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement