Advertisement

முதல் நாள் வசூலில் அதிர்ச்சியடைந்த பிக்பிரதர்

தமிழில் ரஜினி, விஜய், அஜித் படங்களுக்கான முதல்நாள் ஓபனிங் வசூல் பற்றிய எதிர்பார்ப்பு எப்படி இருக்குமோ அதேபோன்று தான் மலையாளத்தில் மோகன்லால் படங்களுக்கும் முதல் நாள் வசூல் குறித்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இதற்கு முன்பு வெளியான மோகன்லால் படங்கள், பெரும்பாலும் கேரளா முழுவதும் சேர்த்து நான்கு கோடிக்கு குறைவில்லாத அளவில் வசூலித்து வந்தது.. குறைந்தபட்சமாக என்றாலும் கூட கிட்டத்தட்ட 2.75 கோடிக்கு குறையாமல் முதல் நாள் வசூல் பெற்று வந்தது.

இந்த நிலையில் நேற்று சித்திக் டைரக்ஷனில் மோகன்லால் நடிப்பில் உருவாகி கேரளா முழுவதும் 284 தியேட்டர்களில் வெளியான 'பிக் பிரதர் படம்' அதிர்ச்சிகரமாக கேரளா முழுவதும் சேர்த்து 1.84 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இது ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் விநியோகஸ்தர்கள் தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேசமயம் முன்பு போல அல்லாமல், தியேட்டர்களின் எண்ணிக்கை குறைவாக ரிலீஸ் ஆனதும், இந்த படம் வியாழனன்று ரிலீஸ் ஆனதும் வசூல் குறைய காரணம் என்கிறார்கள். அதுமட்டுமல்ல, ஏற்கனவே ரஜினியின் தர்பார், வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் குஞ்சாக்கோ போபனின் 'அஞ்சாம் பதிரா' மற்றும் தனுஷின் 'பட்டாஸ்' ஆகிய படங்களுக்கும் ரசிகர்கள் கூட்டம் பிரிந்ததால் வசூல் குறைந்துள்ளது என்றும் சொல்லப்படுகிறது. வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் படத்தின் வசூல் கூடும் என்றும் வினியோகஸ்தர்கள் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement