Advertisement

மோகன்லால் - மம்முட்டியின் ஆதரவு வளையத்தில் ஐக்கியமான திலீப்

மலையாள நடிகர் திலீப், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடிகை ஒருவரின் கடத்தல் வழக்கில் சிக்கி, கிட்டத்தட்ட 85 நாட்கள் சிறை தண்டனையும் அனுபவித்து, அதன் பிறகு ஜாமீனில் வெளியே வந்தார். அவர் சிறை செல்வதற்கு முன்பும் சிறை சென்று வந்த பின்பும் மலையாள திரையுலகில் சினிமா பெண்கள் நல அமைப்பை சேர்ந்த சில நடிகைகள் அவருக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். அவர் மீது குற்றம் சாட்டப்பட்டதை தொடர்ந்து மலையாளத் திரையுலக சங்கத்தில் இருந்து அவர் நீக்கப்படுவதாக நடிகர் மம்முட்டி அறிவித்தார்.

அதன்பிறகு சிறையில் இருந்து வெளிவந்து படங்களில் நடித்து வருகிறார். மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர தடையில்லை என்று அறிவிக்கப்பட்டாலும் கூட சங்கத்தை விட்டும், திரையுலக நிகழ்ச்சிகளில் இருந்தும் ஒதுங்கியே இருந்து வந்தார் திலீப்.. இதற்கிடையே சினிமா பெண்கள் நல அமைப்பைச் சேர்ந்த பார்வதி, ரீமா கலிங்கல் உள்ளிட்ட சிலர் திலீப்புக்கு ஆதரவாக செயல்படுவதாக நடிகர் சங்கத்தையும், அதன் தலைவரான மோகன்லாளையும் விமர்சித்து வந்தனர். ஆனாலும் திலீப்புக்கு தங்களது மறைமுக ஆதரவை கொடுத்து வந்தனர் மோகன்லாலும் மம்முட்டியும்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மம்முட்டி, மோகன்லால் இணைந்து நடத்திய ஒரு பார்ட்டியில் சீனியர் நடிகர்களுடன் சேர்ந்து திலீப்பும் உற்சாகமாக கலந்து கொண்டார். மற்ற நடிகர்கள் அனைவரையும் சேர்த்து மம்முட்டி எடுத்த செல்பி ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது. அந்தவகையில் நடிகர் திலீப் சீனியர்களின் ஆதரவு வளையத்திற்குள் பாதுகாப்பாக இருப்பதை இந்த செல்பி ஒன்றே சொல்லாமல் சொல்கிறது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement