Advertisement

திரில்லர் மூடுக்கு மாறிய மலையாள திரையுலகம்

தமிழ் திரையுலகில் பொதுவாக ஒரு காமெடி படம் வெற்றி பெற்றால் தொடர்ந்து காமெடி படங்களும், பேய் படம் வெற்றி பெற்றால் தொடர்ந்து ஹாரர் படங்களும் என ஒரு குறிப்பிட்ட சீசனை உருவாக்கி விடுவார்கள். மலையாள திரையுலகில் அதுபோல ஒரு சிஸ்டம் இல்லை என்றாலும், தற்போது ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட ஐந்தாறு படங்களுக்கு மேலாக திரில்லர் படங்களாக உருவாகி வருவது ஆச்சரியமளிக்கிறது.

அதிலும் குறிப்பாக சமீபத்தில் வெளியான குஞ்சாக்கோ போபன் நடித்த அஞ்சாம் பத்திர திரைப்படத்தின் வெற்றி மற்ற திரில்லர் திரைப்படங்களை தயாரித்து வருபவர்களை உற்சாகமடையும் செய்திருக்கிறது. இத்தனைக்கும் இந்த படம் வெளியாவதற்கு முன்பே மற்ற திரில்லர் படங்கள் தயாரிப்பில் இருந்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தகது..

அதில் முக்கியமாக பகத் பாசில் நடித்து வரும் 'தங்கம்', மம்முட்டி நடிப்பில் உருவாகிவரும் 'தி பிரைஸ்ட்' மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் டொவினோ தாமஸின் பாரன்சிக் உள்ளிட்ட இன்னும் சில படங்களும் த்ரில்லர் படமாகவே உருவாகி வருகின்றன. அடுத்து வரும் சில மாதங்களில் இந்த படங்கள் தொடர்ந்து வெளியாக இருப்பதால் மலையாள திரையுலகம் திடீரென த்ரில்லர் மூடுக்கு மாறியிருப்பது போன்ற ஒரு தோற்றம் உருவாகியிருக்கிறது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement