Advertisement

அடுத்து குடும்ப கதையில் விஜய்: பாண்டிராஜ் இயக்கம்?

பிகில் படத்தைத் தொடர்ந்து, நடிகர் விஜய், ‛மாஸ்டர்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இது விஜய்யின் 64வது படம்.

இதை அடுத்து, விஜய்யின் 65வது படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்குவார் என தகவல்கள் கூறுகின்றன. தற்காலிகமாக தளபதி 65 என பெயர் சூட்டிவிட்டு, பின், நிரந்தர தலைப்பு வைக்கலாம் எனவும் கூறுகின்றனர்.

கடை குட்டி சிங்கம், எங்க வீட்டுப் பிள்ளை போன்று குடும்ப கதையம்சம் கொண்ட படமாக எடுக்கவும் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இந்தப் படம் குறித்த அறிவிப்பு பொங்கலை ஒட்டி அறிவிக்கப்படும் எனவும் சினிமா வட்டாரங்களில் கூறுகின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Velayutharaja Raja - Thirupputhur,இந்தியா

    Vijay with pandiraj....it will be mass

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement