Advertisement

மகேஷ்பாபுவுடன் நடிக்க சிரமப்பட்ட ராஷ்மிகா

Share

விஜயதேவரகொண்டாவுடன் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் படங்களில் நடித்த கன்னட நடிகை ராஷ்மிகா, அதையடுத்து மகேஷ்பாபுவுடன் சாரிலேரு நீகேவரு என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஜனவரி 10-ந்தேதி திரைக்கு வருகிறது.
இந்நிலையில் இப்படத்தில் மகேஷ்பாபுவுடன் நடித்த அனுபவம் பற்றி ஒரு ஆங்கில நாளேட்டிற்கு ராஷ்மிகா அளித்த பேட்டியில், மகேஷ்பாபு ஒரு உண்மையான சூப்பர் ஸ்டார் என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த படத்தில் நடிக்கும்போது அவர் எனக்கு உத்வேகம் கொடுத்தார். அவருடன் நடனமாடும்போது நான் நிறைய சிரமப்பட்டேன். அவரது வேகத்திற்கு என்னால் ஈடுகொடுக்க முடியவில்லை என்பதால் ஒவ்வொரு முறையும் நடனத்தை ஒத்திகை பார்த் துக்கொண்டுதான் நடனமாடினேன். சினிமாவில் எனது கேரியரை தொடங்கியபோதே மகேஷ்பாபுவுடன் நடித்ததை அதிர்ஷ்டமாக கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement