Advertisement

ராகவா லாரன்சுக்கு அழைப்பு விடுத்த கமல்

ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தின் ஆடியோ விழா சென்னையில் நடைபெற்றபோது பேசிய ராகவா லாரன்ஸ், நான் சிறுவனாக இருந்தபோதே ரஜினி ரசிகனாக இருந்தேன். அப்போது கமல் ரசிகருடன் ஏற்பட்ட சண்டையில் கமலின் போஸ்டரில் சாணி அடித்தேன் என்று பேசினார். அது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதையடுத்து ரஜினியின் 70 வயது பிறந்த நாள் விழாவில் பேசிய ராகவா லாரன்ஸ், நான் அறியாத, புரியாத வயதில் கமல் சாரின் போஸ்டருக்கு சாணி அடித்ததாக சொன்னேன். ஆனால் அதை சர்ச்சையாக்கி விட்டனர். ஆனால் நான் அப்படி பேசியதற்கான காரணமே வேறு. ரஜினியும் கமலும் நண்பர்களாக கைகோர்த்து செல்லும்போது அவர்களின் ரசிகர்களாகிய நாமும் சண்டை போடாமல் கைகோர்த்து நண்பர்களாக செல்ல வேண்டும் என்றுதான் சொன்னேன். அதனால் கமல் சாரை நான் தவறான நோக்கத்துடன் அப்படி பேசியதாக யாரும் நினைக்க வேண்டாம் என்று தெளிவுபடுத்தினார்.
அதோடு, இன்னொரு தகவலையும் அந்த மேடையில் சொன்னார் லாரன்ஸ். கமல் சாரின் தலைவன் இருக்கிறான் படத்தில் எனக்கும் ஒரு வேடம் இருப்பதாக நடிக்க அழைத்தார். ஆனால் நான் கால பைரவர் படத்தில் பிசியாக இருப்பதால் கால்சீட் பிரச் சினையால் நடிக்க முடியவில்லை. அப்படிப்பட்ட கமல் சாரை நான் மனதளவில்கூட தவறாக பேச வேண்டும் என்று நினைக்க மாட்டேன். அதனால் என் பேச்சை யாரும் தவறான கோணத்தில் சித்தரிக்க வேண்டாம். கமல் சார் மீது நான் நிறைய மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளேன் என்று சொன் னார் ராகவா லாரன்ஸ்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா

    நீ எவ்வளவு பெரிய தில்லாலங்கடின்னு நல்லா தெரியும். நீ ரஜினி ரசிகனா நடிக்கறே.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement