dinamalar telegram
Advertisement

'நெருப்புக்கே போன் செய்யறேன்' - கலக்கும் பாலகிருஷ்ணா பட டிரைலர்

Share
'நெருப்புக்கே போன் செய்யறேன்' - கலக்கும் பாலகிருஷ்ணா பட டிரைலர் Entertainment பொழுதுபோக்கு

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் பாலகிருஷ்ணா, வேதிகா, சோனல் சௌகான், பூமிகா, பிரகாஷ்ராஜ், ஜெயசுதா மற்றும் பலர் நடிப்பில் தெலுங்கில் உருவாகியுள்ள படம் 'ரூலர்'.

இந்தப் படத்தின் டிரைலரை இன்று காலை யு டியூபில் வெளியிட்டார்கள். பாலகிருஷ்ணா நடிக்கும் ஆக்ஷன் படம் என்றாலே காட்சிகள் ஒவ்வொன்றும் அதிரடியாக இருக்கும். அவரது சண்டைக் காட்சிகள் தமிழ் ரசிகர்களுக்கும் தெரிந்த ஒன்றுதான். சமூக வலைத்தளங்களில் அந்த சண்டைக் காட்சிகள் துண்டு வீடியோக்களாக அதிகமாகவே பரவியுள்ளன.

'ரூலர்' டிரைலரிலும் நாம் எதிர்பார்க்கும் அதிரடியை பாலகிருஷ்ணா காட்டுகிறார். டிரைலரின் முதல் வசனத்திலேயே 'பன்ச்' பறக்கிறது. பின்னணிக் குரலாக, “யாருக்குடா போன் செய்யற பயர் இஞ்சினுக்கா” என ஒரு குரல் கேட்க, அதற்கு மற்றொரு குரல், “பயர் இஞ்சினுக்கு இல்ல, அந்த பயருக்கே போன் செய்யறேன்,” என சொல்கிறது. “யாருடா அந்த பயர்” முதல் குரல் கோபமாகக் கேட்க, பாலகிருஷ்ணா என்ட்ரி கொடுக்கிறார்.

பாலகிருஷ்ணா ரசிகர்களுக்காக எப்படி படம் கொடுக்க வேண்டும் என்பது இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாருக்கு தெரியாதா என்ன ?. போலீஸ் ஆக நடிக்கும் பாலகிருஷ்ணாவின் ஹேர்ஸ்டைலைத் தவிர விவசாயம், சென்டிமென்ட், ஆக்ஷன், அரசியல் என 'ரூலர்' படத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்களுக்குத் தேவையான அனைத்து விஷயங்களும் இருக்கும் போலத் தெரிகிறது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement