Advertisement

படப் பெயரை மாற்றிய ராம்கோபால் வர்மா

Share

சர்ச்சைகளின் இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கியிருக்கும் படம் 'கம்ம ராஜ்யம் லோ கடப்பா ரெட்டுலு'. இந்தப் படத்தில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவைத் தாக்கி சர்ச்சையான ஒரு படத்தை அவர் எடுத்திருக்கிறார்.

இந்தப் படத்திற்கு சென்சார் வழங்க தணிக்கைக் குழுவினர் மறுத்து வந்தனர். மேலும், படத்தின் தலைப்பை மாற்றவும் ஆந்திர உயர்நீதி மன்றம் கூறியிருந்தது. அதனால் படத்தை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்ய முடியவில்லை.

இந்நிலையில் படத்தின் தலைப்பை 'அம்மா ராஜ்யம் லோ கடப்பா பிட்டலு', என பெயரை மாற்றியுள்ளதாக ராம்கோபால் வர்மா அறிவித்துள்ளார்.

“நம் நாட்டில் இன்னும் கருத்து சுதந்திரம் உள்ளது என்பதை அறியும் போது சிலிர்ப்பாக உள்ளது. படத்திற்கு சென்சார் ஆகிவிட்டது. டிசம்பர் 12ம் தேதி ரிலீஸ்” எனத் தெரிவித்துள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement