Advertisement

கமல்ஹாசன் போஸ்டர் மீது 'சாணி' அடித்தேன் - ராகவா லாரன்ஸ் சர்ச்சை பேச்சு

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் 'தர்பார்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று(டிச.,7) சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் பேசிய பேச்சு சர்ச்சையாகி உள்ளது. நேற்று இரவு அவர் பேசிய உடனேயே சமூக வலைத்தளங்களில் பலரும் அவருடைய பேச்சுக்கு கண்டனங்களைத் தெரிவிக்க ஆரம்பித்தனர். அதன் பிறகு அதற்கு நள்ளிரவிலேயே விளக்கமும் கொடுத்துள்ளார் ராகவா.
அவர் பேசுகையில், “தலைவர் படம் ரிலீஸ் ஆகும் போது, போஸ்டர் ஒட்டும் போது சண்டை போட்டிருக்கிறேன். இங்க சொல்றதுல தப்பில்லை. கமல் சார் போஸ்டர் ஒட்டினால் அதுல போய் சாணி அடிப்பேன். அப்போ வந்து மனநிலைமை அப்படி இருந்தது. இப்ப பார்க்கும் போதுதான் தெரியுது, அவங்க ரெண்டு பேரும் அவ்வளவு குளோஸுன்னு. ரெண்டு பேரும் கை பிடிச்சி நடக்கும் போதெல்லாம் வேற ஏதோ நடக்கப் போகுதுன்னு தோணுது. அவ்வளவு தீவிரமான ரசிகனா இருந்த என்னை இப்ப முதல் வரிசைல உட்கார வச்சி அழகு பார்க்கற ஒரே மனுஷன் சூப்பர் ஸ்டார்தான்,” என்றார். அவருடைய இந்த பேச்சுக்கு ரஜினி ரசிகர்களும் பலமாக கைதட்டினர். தொடர்ந்து பேசுகையில் நாம் தமிழர் கட்சி சீமானையும் கிண்டலடித்தார். இதனால் நள்ளிரவில் கமல்ஹாசன் ரசிகர்களும், சீமான் கட்சி தொண்டர்களும் ராகவா லாரன்ஸுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.
பின்னர் ராகவா லாரன்ஸ் அதற்கு ஒரு விளக்கமளித்தார். அதில், “தர்பார் இசை வெளியீட்டு விழாவில் நான் பேசிய பிறகு, கமல் சார் போஸ்டர் மீது நான் சாணி அடித்தது பற்றி பேசிய பேச்சு மட்டும் ஹைலைட் செய்யப்படுகிறது. நான் சிறு வயதில் தலைவரின் தீவிர ரசிகனாக இருந்த போது கமல் சார் பற்றித் தெரியாமல் செய்த விஷயம் அது. கமல் சார் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். நான் எப்போதாவது தவறாகப் பேசியிருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்பேன். ஆனால், இங்கு நான் எதுவும் தவறாகப் பேசவில்லை. முழு வீடியோவைப் பார்த்தால் உங்களக்குப் புரியும். சிலர் இதை டிவிஸ்ட் செய்கிறார்கள். என் மனதில் கமல் சாருக்கு எவ்வளவு மரியாதை என்பது எனக்குத் தெரியும். அதை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் இந்த வீடியோவைப் பாருங்கள்,” எனப் பதிவிட்டு அவர் பேசிய பேச்சின் வீடியோ லின்க் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (23)

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  இவர் சொன்னது என்ன தவறு? தெரியாத வயதில் செஞ்சதை சொன்னார். நல்ல மனுஷர்.

 • Rajesh - Delhi,இந்தியா

  nerla paathaa yaarume சாணி யையும் மனுஷ கழிவையும் கலந்து உன் மூன்ஞ்சியில அடிப்பாங்க

 • தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா

  இவெம்மூஞ்சியே அந்த நெறெத்துலதான் இருக்கு 😂😂😂

 • Narasimhan - Manama,பஹ்ரைன்

  இவன் மூஞ்சி ஏற்கனவே சாணியில் தோய்த்தெடுத்தது போல் தான் இருக்கிறது. கமலின் கால் தூசுக்கு பொறாத இந்த வெட்டி பயல்

 • vaithiyalingam - Bengaluru,இந்தியா

  ஒரு டான்ஸ் மாஸ்டருக்கு எது இவ்வளவு பணம் ? தொண்டு செய்கிறேன், மாற்று திறனாளிகளுக்கு ஆதரவு தருகிறேன் என்று சொல்வதில் ஏதோ பெரிய வில்லங்கம் இருக்கிறது. அதுவும் அழகான மாற்றுத்திறனாளிகளுக்கு தான் இந்த சுத்த தமிழன் லாரன்ஸ் உதவுவார்

  • ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா

   விசாரிக்கப் படவேண்டும்.

 • vaithiyalingam - Bengaluru,இந்தியா

  ராகவா பக்கத்தில் லாரன்ஸ் எப்படி வந்தது? இவன் background பயங்கரமான ஒன்று வெளியில் நல்லவன் வேஷம் நிஜத்தில் வேறொரு குரூர முகம்

  • ribbaba ribabbari - ,

   Read his life incidents. he was cured by Raghavendra Swamy and so changed his name to Raghavendra Lawrence. விஷயம் தெரியாம ஏதாவது பிதற்ற வேண்டியது.

 • vaithiyalingam - Bengaluru,இந்தியா

  ராகவா + லாரன்ஸ் பெயர் ஒன்றே போதும் இவன் எவ்வளவு பெரிய தில்லாலங்கடி, பேர்வழி என்று

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  இப்பவாவது புரிகிறதா, அரசியல், சினிமா எதிரிகள் ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் இடையே தான். ஆனா அவங்க என்னமோ ஒண்ணுக்குள்ள ஒன்னு தான். இதை இளம் சமுதாயம் புரிந்துகொள்ளணும்.

 • Naga - Muscat,ஓமன்

  உண்மையய் சொன்ன ராகவாக்கு பாராட்டுக்கள். நாமும் அப்படிதானே இருந்ததோம், அப்படி இருக்க வச்சானுங்க நம்பல, ரஜினி க்கு கமல் எதிரி, விஜய் க்கு அஜித் எதிரி, சாருக்கானுக்கு சல்மான் எதிரினு நம்பல நம்ப வைய்த்து இவனுங்க பெரிய லெவல்க்கு வந்துட்டானுங்க, இப்ப இவிங்க கட்டிபிடித்து முத்தம் கொடுத்துக்கிறானுங்க. இவிங்கதாம்ப ரசிகர்கள் மேல சானிய ஊத்தி குலுப்பாட்டிடானுங்க.

  • ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா

   உண்மை.

 • chandran - ,

  He left in that extent. good. But in original life of Kamal everyone will throw Sani on him

  • Kumar - Tbilisi,தெற்கு ஜார்ஜியா

   I think everyone will throw cow dung on your poster due to your personal life.

  • clsara - ,

   unnoda familyaa

 • NewIndia_DigitalIndia - Rafale,பிரான்ஸ்

  சாணிக்கு தானே அவமானம் இவனுங்க ஏன் போராடுறானுங்க ?

 • sathyam - Delhi,இந்தியா

  எம்ஜியார் ரசிகர்கள் நம்பியார் மீது பல முறை நேரடி தாக்குதல் நடத்தியது உண்டு. ஆனால். இரண்டு பேருடைய நட்பு ஆழமானது என்பது பின்னர் அறிந்த விஷயம், சினிமாவை வாழ்க்கையோடு பிணைத்து வாழ்வதில் தமிழன் , தமிழன்தான். ராகவா ஒரு தமிழன் .

 • Kumar - Tbilisi,தெற்கு ஜார்ஜியா

  அந்த காலத்தில் இப்படி எல்லாம் நடந்தது உண்டு. நாங்கள் ரஜினி போஸ்ட்டரை ஓட்டிட்டு போன உடனை கிழித்து எறிவோம். பசை காயுந்து விட்டால் சாணி அடிப்போம்

 • KavikumarRam - Chennai,இந்தியா

  ராகவா சொன்னதுல எதுவும் தப்பா இருக்கிற மாதிரி ஒன்னும் இல்லையே.

 • sudhapriyan - Chennai,இந்தியா

  அந்தாளு ஒண்ணுமே பேசல ...நீங்களே தூபம் போட்டு பெருசா ஆக்குறீங்க .. அங்க ஹெச் ராஜா ,குருமூர்த்தி போன்றோர் படு கேவலமாக பேசுகிறார்கள் . அதெல்லாம் சர்ச்சை ஆகமாட்டுது

  • ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா

   அப்படி இழிவா பேசுறவனை பெரியார் சொன்ன மாதிரி செருப்பால அடிக்கணும்.

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  சாணி அடுச்சவனெல்லாம் நடிகர்களாகவும், இயக்குநர்களாகவும் வந்தால் பேச்சு இப்படித்தான் இருக்கும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement