வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. தேசிய அளவில் பல திரையுலகப் பிரபலங்கள் தனுஷைப் பாராட்டியுள்ளனர். விரைவில் அப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது.
அடுத்ததாக இம்மாதம் 29ம் தேதி கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்த எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீசாக இருக்கிறது. நீண்ட இழுபறிக்குப் பின்னர் பெரும் எதிர்பார்ப்புடன் அப்படம் ரிலீசாக இருகிறது.
இது ஒருபுறம் இருக்க, சத்தமில்லாமல் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார் தனுஷ். இடைவெளியில்லாம் லண்டனில் 64 நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.
மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். கேம்ஸ் ஆஃப் த்ரோன்ஸ் ஹாலிவுட் பட புகழ் ஜேம்ஸ் காஸ்மோ இப்படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் அப்படத்திற்கு சுருளி என பெயர் வைக்க படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!