Advertisement

அஜ்மீர் தர்காவில் சிறப்பு தொழுகை நடத்திய காஜல்

தமிழ், தெலுங்கில் முன்னணி நாயகியாக இருக்கும் காஜல் அகர்வால், தற்போது, நடிகர் கமலுடன் இந்தியன் 2ல் நடித்து வருகிறார். தொன்னூறு வயது சேனாபதிக்கு மனைவியாக 85 வயது அமிர்தவள்ளி கேரக்டரில் நடிக்கிறார்.

இவர் சமீபத்தில், ஒரு பேட்டியில், தனக்கு நல்ல மாப்பிள்ளை அமைந்தால், திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆவேன் என தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் இருக்கும் தர்ஹாவுக்குச் சென்று, அங்கு சிறப்பு தொழுகை நடத்தி இருக்கிறார். தன்னுடைய தாயாருடன் அங்கு சென்று சிறப்பு தொழுகை நடத்தி இருக்கும் நடிகை காஜலுக்கு சிறப்பான வரன் அமைய வேண்டும் என்பதற்காகவே, இந்த சிறப்பு தொழுகை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

மலர் கூடையை தலையில் சுமந்து சென்று, தர்ஹாவில் சிறப்பு தொழுகை நடத்தி காஜல் அகர்வாலின் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.


Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    நானும்தான் அங்கு போயிருக்கிறேன். என்னை யாரும் புகைப்படம் எடுத்து போடவில்லையே?? அர்ரே தேவுடா?

    • samkey - tanjore,இந்தியா

      சட்டையை கழட்டிவிட்டு நூலோடு போயிருந்திக்க மாட்டீர். அதுசரி உங்களுக்கு திருமண தடையா அல்லது சூர்யா போல வேறு விவகாரமும் எதாவது ?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement