Advertisement

விரைவில் சூரரைப்போற்று டீசர்: ஜி.வி.பிரகாஷ்

‛இறுதிச்சுற்று' சுதா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் ‛சூரரைப்போற்று'. அவருடன் அபர்ணா முரளி, ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, கருணாஸ் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், அடுத்த அப்டேட்டாக டீசர் விரைவில் வெளியாக இருப்பதாக ஜி.வி.பிரகாஷ், டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

அதில், ‛‛சூரரைப்போற்று படத்தின் தீம் மியூசிக் தயாராகி விட்டது. இந்த மியூசிக் மாறா மாறா என்று அழைக்கப்படும். விரைவில் டீசரை எதிர்பார்க்கலாம்'' என தெரிவித்துள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement