Advertisement

ஆர்ஜே பாலாஜி படத்தில் நயன்தாரா, குமுறும் கோலிவுட்

Share

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் நம்பர் 1 ஆக இருப்பவர் நயன்தாரா. அவரை எப்படியாவது தங்கள் படத்தில் ஜோடியாக நடிக்க வைத்துவிட வேண்டும் என இன்னமும் அவருடன் ஜோடி சேராத சில ஹீரோக்கள் பகீர பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்களுக்கெல்லாம் கிடைக்காத வாய்ப்பு ஒரு சில படங்களில் காமெடியனாக மட்டுமே நடித்து ஒரே ஒரு படத்தில் நாயகனாக நடித்த ஆர்ஜே பாலாஜிக்கு 'மூக்குத்தி அம்மன்' படம் மூலம் கிடைத்திருப்பதைப் பார்த்து கோலிவுட்டே குமுறிக் கொண்டிருக்கிறது.

ஏற்கெனவே, சிவகார்த்திகேயன் ஜோடியாக 'வேலைக்காரன்' படத்தில் நயன்தாரா நடித்த போது பலரும் பொறாமைப்பட்டார்கள். இப்போது பாலாஜியுடன் நடிக்க நயன்தாரா சம்மதித்திருபபதும் பலரையும் பொறாமைப்படவும் ஆச்சரியப்படவும் வைத்திருக்கிறது.

நயன்தாராவை கன்வின்ஸ் செய்து நடிக்க வைப்பது பெரிய விஷயமில்லை, அவருடைய மனம் கவர்ந்த விக்னேஷ் சிவனை கன்வின்ஸ் செய்தால்தான் இதெல்லாம் நடக்கும் என கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement