Advertisement

அதர்வா மீது ரூ.6 கோடி மோசடி புகார்

நடிகர் அதர்வா மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் மதியழகன் என்பவர் ரூ.6 கோடி மோசடி புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக மதியழகன் அளித்துள்ள புகாரில், ‛‛கிக் ஆஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி ‛செம போத ஆகாத' என்ற படத்தை தயாரித்தார் அதர்வா. இதனை அவுட்ரேட் முறையில் நான் வாங்கி விநியோகம் செய்தேன். இதற்காக அவருக்கு ரூ.5 கோடி பணம் கொடுத்திருந்தேன்.

ஆனால் படம் சொன்ன தேதியில் முடிக்கப்படவில்லை. மேலும் வெளியானதும் தாமதமாக வந்தது. இதனால் எனக்கு ரூ.5.5 கோடி நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அதர்வா மீது புகார் அளித்தேன். விஷால் தலைமையில் நடந்த கூட்டத்தில் என் தரப்பில் நியாயம் இருந்ததால் எனக்கு ஒரு படம் பண்ணி தர சொல்லி முடிவானது. அதர்வாவும் சம்மதம் சொல்லி அந்த படத்திற்கும் அட்வான்ஸாக பணம் வாங்கினார். ஆனால் சொன்னபடி படத்தில் நடிக்க இல்லை. எனவே அவரால் எனக்கு ஏற்பட்ட ரூ.6 கோடி நஷ்டத்தை பெற்று தரும்படி கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • வால்டர் - Chennai,இந்தியா

    ஆயிரம், பத்தாயிரம்னு எல்லாம் பேசவே மாட்டேன்றானுங்களே. ஒன்லி க்ரோர்ஸ்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement