Advertisement

பிரபாஸ் கதை வருண் தேஜ்க்கு சென்றது

சாஹோ படத்தை அடுத்து ஜான் என்ற படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். ஆனால் இந்த படத்தில் அவர் நடிப்பதற்கு முன்பே, சைரா நரசிம்ம ரெட்டி படத்தை இயக்கிய சுரேந்தர் ரெட்டியிடம் ஒரு குத்துச்சண்டை கதையில் நடிக்க ஒப்புதல் கொடுத்திருந்தார்.

ஆனபோதும், சாஹோ படத்தை முடித்து விட்டு பிரபாஸ் வந்த நேரத்தில், சைரா நரசிம்ம ரெட்டியில் பிசியாக இருந்தார் சுரேந்தர் ரெட்டி. அதனால் இன்னொரு கதையை கேட்டு ஜான் என்ற படத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டார் பிரபாஸ். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மே மாதம் வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில், சைரா நரசிம்ம ரெட்டி படத்தை முடித்து விட்டு சுரேந்தர் ரெட்டி வந்தபோது பிரபாஸ் ஜான் படத்தில் பிசியாகி விட்டதால், இப்போது அவருக்காக தான் ரெடி பண்ணி வைத்திருந்த குத்துச்சண்டை கதையை வருண்தேஜை வைத்து இயக்க தயாராகி விட்டார் சுரேந்தர் ரெட்டி.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement