Advertisement

நான்கு மொழிகளில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம்

Share

தேசிய விருது நடிகை கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் அஜய் தேவ்கன் உடன் நடித்து வரும் படம் ‛மைதான்'. கால்பந்தாட்ட பயிற்சியாளர் அப்துல் ரஹீமின் கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடிக்க, அவரது மனைவியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். கடந்த ஆகஸ்ட் முதல் படப்பிடிப்பு நடக்கிறது. இப்படத்திற்காக எடையை குறைத்துள்ளார் கீர்த்தி.

கீர்த்தி சுரேஷின் தென்னிந்திய மார்க்கெட்டை கருத்தில் கொண்டு மைதான் படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் என நான்கு மொழிகளிலும் ஒரே நாளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். மேலும் கீர்த்தி சுரேஷ் தொடர்பான காட்சிகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து படமாக்கி வருகின்றனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement