Advertisement

ஹாலிவுட் படங்களில் ராதிகா ஆப்தே?

தமிழில் ரஜினிகாந்துடன் 'கபாலி', அதற்கு முன்பு கார்த்தியுடன் 'அழகுராஜா' உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் நடித்தவர் ஹிந்தி நடிகை ராதிகா ஆப்தே. அவருக்கு ஹாலிவுட்டிலிருந்து 'ஜேம்ஸ்பாண்ட் 25'வது படத்திலும் 'தி ஸ்டார் வார்ஸ்' படத்திலும் நடிப்பதற்காக அழைப்பு வந்துள்ளது.

அதற்கான வீடியோவை அவர் தயார் செய்து அப்படங்களின் நடிகர்கள் தேர்வு செய்யும் இயக்குனர்களுக்கு அனுப்பியுள்ளார். அதைப் பார்த்து அவர்கள் தேர்வு செய்தால் அந்தப் படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெறுவார். இது பற்றிய தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.

ஜேம்ஸ்பாண்ட் 25வது படத்தின் ஆரம்ப கட்ட வேலைகள் சில மாதங்களுக்கு முன்பே ஆரம்பமாகிவிட்டதாம். 'ஸ்டார் வார்ஸ்' படப்பிடிப்பு கூடிய விரைவில் ஆரம்பமாக உள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Vasudevan Srinivasan - Chennai,இந்தியா

    இது என்ன உடையோ..?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement