Advertisement

திலீப் - அர்ஜுன் பட தலைப்பில் மாற்றம்

நடிகர் அர்ஜுன் தற்போது தமிழில் நடிப்பதுடன் மலையாளத்திலும் நடித்து வருகிறார். அந்த வகையில் மோகன்லாலுடன் 'மரைக்கார் ; அரபிக்கடலின்டே சிம்ஹம்' என்கிற படத்தில் வரலாற்று வீரர் கதாபாத்திரத்தில் அர்ஜுன் நடித்துள்ளார். இன்னொரு பக்கம் திலீப் நடித்து வரும் ஜாக் டேனியல் என்கிற படத்தில் டேனியல் என்கிற அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்தப் படத்தை எஸ்.எல்.புரம் ஜெயசூர்யா என்பவர் இயக்கி வருகிறார்..

தற்போது இந்த படத்தின் தலைப்பில் ஒரு மாற்றம் செய்து அதற்கான போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்கள். அதாவது ஜாக் டேனியல் என்ற இந்த டைட்டிலை ஜாக் அண்ட் டேனியல் என மாற்றியுள்ளார்கள்.

ஜாக் டேனியல் என்கிற பெயர் வைக்கப்பட்ட படங்கள் சென்சார் பிரச்சினைகளில் பலமுறை சிக்கிய விஷயங்கள் குறித்து கேள்விப்பட்ட தயாரிப்பாளர்கள், முன்கூட்டியே உஷாராக இந்த பெயர் மாற்றத்தை செய்துவிட்டார்களாம். நவம்பரில் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement