Advertisement

முதுகில் குத்தி விட்டார்: மஞ்சு வாரியருக்கு ஸ்ரீகுமார் மேனன் பதிலடி

பிரபல நடிகை மஞ்சு வாரியர் சமீபத்தில் மலையாள இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் என்பவர் மீது தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி போலீசிலும், மலையாள திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திலும், மலையாள நடிகர் சங்கத்திலும் புகார் அளித்துள்ளார்..

ஸ்ரீகுமார் மேனன் இயக்கிய விளம்பர படம் ஒன்றிலும் அதைத்தொடர்ந்து அந்த நட்பின் காரணமாக மோகன்லாலை வைத்து அவர் இயக்கிய ஓடியன் என்கிற படத்திலும் நடித்து இருந்தார் மஞ்சுவாரியர். ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை இப்பொழுது இருவருக்குமிடையே பிரச்சனை பூதாகரமாக வெடித்து புகார் கொடுக்கும் அளவிற்கு சென்றுள்ளது..

மஞ்சுவாரியர் புகார் கொடுத்ததை தொடர்ந்து, ஸ்ரீகுமர் மேனன் இது பற்றிக் கூறும்போது, “என்னுடைய நண்பர்கள் மஞ்சு வாரியருக்கு நான் இக்கட்டான சமயங்களில் உதவி செய்தபோது என்னை எச்சரித்தார்கள்.. மஞ்சுவாரியரை பொறுத்தவரை அவருடைய தேவை முடிவடைந்து விட்டால் உன்னை முதுகில் குத்தவும் தயங்கமாட்டார் என்று கூறினார்கள்.. அதனால் மஞ்சு வாரியருக்கு இக்கட்டான நேரங்களில் நான் உதவியாக இருந்ததை மறந்துவிட்டு அவர் இவ்வாறு புகார் அளித்திருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.. அவற்றை சட்ட ரீதியாகவே நான் எதிர்கொள்ள போகிறேன்” என்று கூறியுள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement