Advertisement

சுரேஷ்கோபியின் அடுத்த படமும் வாரிசு இயக்குனருக்கு தான்

Share

மலையாள சினிமாவில் ஆக்சன் ஹீரோவாக வலம் வந்த சுரேஷ்கோபி, கடந்த சில வருடங்களாக படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு பாஜகவில் சேர்ந்து அரசியல் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் மீண்டும் அவரை திரையுலகிற்கு அழைத்து வந்திருக்கிறார் நடிகர் துல்கர் சல்மான்.

துல்கர் தயாரித்து, கதாநாயகனாக நடிக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் சுரேஷ்கோபி. இந்த படத்தை பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடுவின் மகன் அனூப் சத்யன் என்பவர் இயக்கி வருகிறார். சுரேஷ் கோபிக்கு ஜோடியாக ஷோபனா நடிக்கிறார்.

இந்த நிலையில் சுரேஷ் கோபியை வைத்து அடுத்ததாக முழுக்க முழுக்க ஆக்ஷன் படமொன்றை இயக்க தயாராகி வருகிறார் பிரபல கதாசிரியர் ரெஞ்சி பணிக்கரின் மகன் நிதின் ரெஞ்சி பணிக்கர். இவர் ஏற்கனவே மம்முட்டியை வைத்து கசபா என்கிற போலீஸ் படத்தை இயக்கியவர்.. அதையடுத்து தான் எழுதியுள்ள அதிரடியான கதைக்கு சுரேஷ் கோபி தான், சரியாக இருப்பார் என்று அவரை ஹீரோவாக தேர்வு செய்துள்ளாராம்.. சுரேஷ் கோபியின் பல ஹிட் படங்களுக்கு நிதினின் தந்தை ரெஞ்சி பணிக்கர் கதை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement