Advertisement

துருவ் விக்ரமை பாராட்டிய பிரித்விராஜ்.

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி அவருக்கு திரையுலகின் வெற்றி வாசலை திறந்து விட்ட படம் ‛அர்ஜுன் ரெட்டி'. இதன் தமிழ் ரீமேக்கில் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக நடித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் ரீமேக்கை வர்மா என்கிற பெயரில் பாலா இயக்கியிருந்தார்.

தயாரிப்பாளர்களுக்கு அந்த படம் திருப்தி அளிக்காமல் போகவே, அதை அப்படியே ஒதுக்கி வைத்துவிட்டு ஆதித்ய வர்மா என்கிற பெயரில் தெலுங்கு இயக்குனர் கிரீஷ்யா என்பவரை வைத்து இந்த படத்தை மீண்டும் புதிதாக ரீமேக் செய்துள்ளனர். நேற்று வெளியான டிரைலரை தற்போது வரை 3 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளத.

டிரைலரில், துருவ்வின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். மலையாள நடிகர் பிரித்விராஜ், “ஒரு அறிமுக ஹீரோவுக்கு உண்டான அம்சத்துடன் துருவ் இருக்கிறார்” என்று பாராட்டியுள்ளார்.

துருவ்வின் தந்தை விக்ரமுடன் ராவணன் என்கிற படத்தில் இணைந்து நடித்துள்ள பிரித்விராஜும் ஒரு நட்சத்திர வாரிசு நடிகர் தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement