Advertisement

த்ரிஷாவின் புது கார்

Share

கிட்டதட்ட இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் கோலோச்சி வருகிறார் நடிகை த்ரிஷா. கல்லூரியில் படிக்கும் காலத்தில் அவர், 'சினிமாவா; ஒரு போதும் அந்தப் பக்கம் காலடி எடுத்து வைக்க மாட்டேன்' என்று சொல்லி பேட்டிக் கொடுத்தவர்தான், இன்று, இருபது வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

கடுமையான உழைப்பு; விடா முயற்சி என்று சினிமாவில் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருக்கும் நடிகை த்ரிஷாவுக்கு, சமூக சேவை, இரவு நேர விருந்து பார்ட்டி என்று வித்தியாசமான சிந்தனைகளையும், பொழுது போக்கையும் வைத்திருப்பவர்.

மார்க்கெட்டில் எந்த புதிய கார் பார்த்தாலும் அதை வாங்கி விடுவதும், அவருடைய பொழுது போக்குகளில் ஒன்று. அப்படி அவர் லேட்டஸ்ட்டாக Mercedes Bense Class cabriolet C -300 என்ற காரை வாங்கி இருக்கிறார். அந்தக் காரின் மார்க்கெட் மதிப்பு 65 லட்ச ரூபாயாம். இந்தக் காரில்தான் தற்போது நடிகை த்ரிஷா வலம் வருகிறார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement