சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் பிகில் படம் தீபாவளிக்கு இரு தினங்கள் முன்னதாக (25 ம் தேதி) வெளியிடப்பட்டும் என படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி டுவிட்டரில் அறிவித்து உள்ளார்.
அட்லீ இயக்கத்தில் உருவாகி உள்ள பிகில் படத்தில் விஜய் மூன்று வித கெட்டப்பில் நடித்துள்ளார். முன்னதாக இப்படத்தின் டிரெய்லர் கடந்த சனிக்கிழமை வெளியானது. அதிகம் பேர் (4 தினங்களில் 3 கோடி பேர்) பார்த்த டிரெய்லர் என்ற சாதனையை படைத்துள்ளது.
படத்திற்கு சென்சார் அதிகாரிகள் டில்லி, கோர்ட் என இடம் பெறும் வார்த்தைகளை மியூட் செய்துள்ளனர். தொடர்ந்து வன்முறை காட்சி ஒன்றும் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது விஜய் பேசியதை அடுத்து உருவான சர்ச்சை, கதை திருட்டு, நீதிமன்றத்தில் வழக்கு என படம் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது. இதனால் படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் 25ம் தேதி வெள்ளிக்கிழமை தீபாவளிக்கு இருதினங்கள் முன்னர் பிகில் படம் வெளியிடப்படும் என படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனைதொடர்ந்து விஜய் ரசிகர்கள் இரண்டு தினங்கள் முன்னதாகவே தீபாவளியை கொண்டாட தயாராகி வருகின்றனர்.
தீபாவளிக்கு முன்னதாகவே ரிலீ்ஸ்ஆகிறது விஜயின் பிகில்
வாசகர் கருத்து (2)
தீபாவளி இந்துக்கள் பண்டிகை அல்லவா , அதனை எப்படி பிகில் மூலம் கொண்டாடலாம்? அதனால் தான் இரு தினங்களுக்கு முன்னர்
munadiye release aitaalum!