Advertisement

அக்.,25 ல் கார்த்தியின் கைதி ரிலீஸ்

Share

கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள கைதி படம் அக்டோபர் 25 ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து, சென்சாரில் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. முதலில் இப்படம் தீபாவளி நாளான அக்.,27 அன்று வெளியிடப்படும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் முன்னர் அறிவிக்கப்பட்டதை விட 2 நாட்களுக்கு முன்னதாக படம் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் ஹீரோயின், பாடல்கள் என எதுவும் கிடையாது எனவும், படம் முழுக்க சண்டைக் காட்சிகள் மட்டுமே நிறைந்திருக்கும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது. இருந்தும் சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டிரெய்லருக்கு ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement