Advertisement

ரம்யா கிருஷ்ணன் பட ட்ரெய்லரை வெளியிடும் மோகன்லால், மம்முட்டி

மலையாளத்தில் பிரபல இயக்குனரான வினயன் குறித்து தமிழ் ரசிகர்களுக்கும் ஓரளவு தெரிந்திருக்கும். விக்ரம் நடித்த காசி, பிரித்விராஜ் நடித்த அற்புதத்தீவு உட்பட தமிழில் சில படங்களை இயக்கியுள்ள இவர், தற்போது மலையாளத்தில் 'ஆகாசகங்கா 2' என்கிற ஹாரர் படத்தை இயக்கியுள்ளார். இது 19 வருடங்களுக்கு முன்பு அவர் இயக்கிய ஆகாச கங்கா என்கிற வெற்றிப் படத்தின் இரண்டாவது பாகமாக உருவாகி உள்ளது.
இந்த படத்தின் கதாநாயகியாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.. இதில் இவர் அமெரிக்காவில் இருந்த பிளாக் மேஜிக்கில் டாக்டரேட் பட்டம் பெற்று திரும்பும் டாக்டர் சௌமினி தேவி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி இருந்த நிலையில், தற்போது இந்தப்படத்தின் ட்ரெய்லரை நாளை மோகன்லால், மம்முட்டி இருவரும் இணைந்து தங்களது முகநூல் பக்கங்களில் வெளியிடுகின்றனர். கடந்த சில வருடங்களாகவே மோகன்லாலுடன் மன வருத்தத்தில் இருந்த இயக்குனர் வினயன், சமீபத்தில் தான் அவருடன் சமரசமாகி, அவர் படத்தை இயக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement