Advertisement

கால்பந்தாட்ட போட்டி: விஜய் கலந்து கொள்கிறாரா?

விஜய் நடிப்பில் அட்லீ இயக்கியுள்ள படம் ‛பிகில்'. தீபாவளிக்கு திரைக்கு வரும் இந்த படம் பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாகக் கொண்ட கதையில் உருவாகியுள்ளது. நயன்தாரா நாயகியாக நடித்திருக்கிறார்.

இந்நிலையில், சென்னையில் ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் எப்சி கால்பந்து கிளப் இணைந்து ஒரு பிரமாண்ட கால்பந்தாட்ட போட்டி நடித்துகிறார்கள். பிகில் படத்தின் பிரமோசனுக்காக நடத்தப்படும் இந்த போட்டி வருகிற 19-20 தேதிகளில் சென்னையில் உள்ள வேளச்சேரி கால்பந்தாட்ட மைதானத்தில் நடைபெறுகிறது.

மொத்தம் 64 அணிகள் கலந்து கொள்கின்றன. நாக்-அவுட் முறையில் நடைபெறும் இந்தபோட்டியில் வெற்றிபெறும் அணிக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. போட்டியின் இறுதி நாளில் விஜய் கலந்து கொண்டு பரிசு கோப்பையை வழங்குவார் என செய்தி வெளியாகியுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • JMK - Madurai,இந்தியா

    இவர் கலந்தா என்ன கலக்கவில்லை என்றால் என்ன ? நாட்டுக்கு ரொம்ப முக்கியம் ?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement