Advertisement

பிரீத்தி ஜிந்தா பதிவிட்ட சூப்பர் வீடியோ

Share

சாலைகளில் போக்குவரத்து விதிமீறல் கூடாது என்று விளம்பரங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில், சாலையில் வாகனங்கள் சிக்னலுக்காக நின்று கொண்டிருக்கும்போது, ஒரு மாடும் சிக்னலுக்காக காத்துக் கொண்டிருக்கும் வீடியோ ஒன்றை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா.

அதோடு, ‛‛சாலைகளில் பயணம் செய்யும்போது போக்குவரத்து விதிகளை பின்பற்ற உங்களுக்கு கடினமாக இருந்தால், விலங்குகளிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். எங்களது விலங்குகள் கூட போக்குவரத்து விதிகளை மதித்து நடக்கின்றன என்று கருத்தினையும் இந்த வீடியோவுடன் பதிவிட்டுள்ளார் பிரீத்தி ஜிந்தா. இந்த வீடியோவை 56 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்த்து லைக் கொடுத்துள்ளார்கள்.


Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement