Advertisement

சைரா: டப்பிங் பேசிய தமன்னா

சிரஞ்சீவி நடிப்பில் ஐந்து மொழிகளில் தயாராகியுள்ள படம் ‛சைரா நரசிம்ம ரெட்டி'. சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ள இந்த படத்தில் சுதந்திர போராட்ட வீரராக சீரஞ்சீவி நடித்துள்ளார். சிரஞ்சீவியின் மனைவியாக நயன்தாரா நடிக்க, தமன்னா ஒரு புரட்சி பெண்ணாகவும், அனுஷ்கா - ஜான்சி ராணி வேடத்திலும் நடித்துள்ளனர்.

அக்டோபர் 2-ந்தேதி திரைக்கு வரும் இந்த படத்தில் இறுதிக்கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சைரா படத்தில் தான் நடித்துள்ள லட்சுமி கேரக்டருக்காக தெலுங்கு மற்றும் ஹிந்தியில் டப்பிங் பேசியுள்ளார் தமன்னா.

‛‛இந்த படத்தில் ஒரு பகுதியாக இருப்பது ஒரு அற்புதமான அனுபவம். உங்கள் அனைவரையும் தியேட்டர்களில் மிக விரைவில் சந்திப்பேன்'' என தமன்னா தெரிவித்துள்ளார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement