Advertisement

உணர்ச்சி பெருக்கில் பிக்பாஸ் வீடு

சென்னை: பிக்பாஸ் வீட்டில் இந்தவாரம் முழுக்க உணர்ச்சி பெருக்காக இருக்க போகிறது. போட்டியாளர்களின் உறவினர் ஒவ்வொருவராக வருகின்றனர். முதலாவதாக முகேனின் அம்மா மற்றும் அவரது சகோதரி வந்து சென்றுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று பிரீசிங் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அனைவரையும் பிரீஸ் செய்த பிக்பாஸ், அந்த நேரம் பார்த்து முகெனின் அம்மாவை மெயின் டோர் வழியாக உள்ளே அனுப்பினார். அம்மாவை பார்த்த முகென், டாஸ்க்கை மறந்து ஓடி சென்று தாயை கட்டி அனைத்துக்கொண்டார்.

பிறகு சந்தோஷத்தில் அவரை தூக்கி சுற்றினார். இதை பார்த்து மற்ற ஹவுஸ்மேட்ஸ் கண்கலங்கினர். ரகசிய அறையில் இருந்த சேரனும் இந்த காட்சியை பார்த்து கண்கலங்கினார்.

சிறிது நேரத்தில் கன்பெஷன் அறை வழியாக முகெனின் தங்கை பிக்பாஸ் வீட்டிற்கு வந்தார். அவரை பார்த்ததும் முகென் இன்னும் குஷியாகிவிட்டார். அவரை தனது தோளில் தூக்கி வைத்து கொண்டாடினார் முகென்.

அம்மா மற்றும் தங்கையுடன் சிறிது நேரம் முகென் உரையாற்றினார். பிக்பாஸ் வீட்டை அவர்களுக்கு சுற்றி காண்பித்தார். ஸ்டார் பேட்ஜ் ஒன்றை தங்கைக்கு அணிவித்தார் முகென். பிறகு இருவரும் கண்ணீர் மல்க விடை பெற்றுக்கொண்டனர். இதனால் பிக் பாஸ் வீடே உணர்ச்சிப் பெருக்கில் மிதந்தது.

75 நாட்களுக்குப் பின் தனது குடும்ப உறுப்பினர்களைப் பார்த்த சந்தோசத்தில் இருந்தார் முகென். மற்ற போட்டியாளர்கள் முகென் குடும்பத்தைப் பார்த்து, தங்களது குடும்பத்தையே பார்த்தவாறு மகிழ்ச்சி அடைந்தனர்.

அடுத்ததாக தங்களது வீட்டில் இருந்து யார் வரப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் அவர்களது பேச்சில் காணப்பட்டது. இந்நிலையில் இன்று(செப்.,11) வெளியான மற்றொரு புரொமோவில் லாஸ்லியாவின் தந்தை உள்ளே வருகிறார். லாஸ்லியா தன் தந்தை பார்த்தே 10 ஆண்டுகளாகிவிட்டதாக கூறியிருந்தார். அவரின் வருகையை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதார் லாஸ்லியா. மேலும் பிக்பாஸில் தனது அப்பாவாக கருதும் சேரனும் மீண்டும் உள்ளே சென்றுள்ளார். இதனால் இந்தவாரம் முழுக்க உணர்வுப்பூர்வமான காட்சிகள் இருக்கும் என தெரிகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

 • Govind - Delhi,இந்தியா

  இங்கு சேரன் முதல் அனைவரும் மிகையாக நடித்து கொண்டு இருக்கிறார்கள். சேரன் மற்றும் அனைவரும் தங்கள் குடும்ப உறுப்பினர்களை கண்டபோது சினிமாவில் வருவது போன்றெ நடிக்கிறார்கள். இவர்கள் பாசம் போலியாக இருக்கிறது. வருடக்கணக்கில் குடும்பத்தை பிரிந்து வாழும் மக்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்கள் ஒன்னும் இது மாதிரி சீன் போடுவது கிடையாது. நானுமே பலவருடங்கள் வெளி நாட்டில் வாழ்ந்து இருக்கிறேன். நான் ஒன்றும் இது மாதிரி போலியாக நடிக்கவில்லை. இதில் உள்ள அனைவரும் யார் அதிகமாக நடித்து தங்களை ஏதோ மிகவும் பொறுப்புள்ளவர்கள் போல காட்டி கொள்ளவேண்டும் என்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். குறிப்பாக சேரன் , சண்டி திடீர் திடீர் என்று அழுகை, சிரிப்பு ஒரு மனநிலை பாதிப்பிக்கப்பட்ட மக்கள் வாழும் கூடாரத்தை நினைவு படுத்துவது போல இருக்கிறது.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  நெறைய பேர் இந்த சனியன் சீரியலை பார்ப்பதை நிப்பாட்டி விட்டதால் இப்படியெல்லாம் விளம்பரம் பண்ணி ஐயா பாருங்க , அம்மா பாருங்க என்று சொல்வது போல இருக்கின்றது இது.

 • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

  என்ன இந்த வருஷம் திடீர்னு Big Boss மேல இவ்வளவு இன்ட்ரெஸ்ட் ?? அதை பற்றி நியூஸ் இல்லமால் இருக்கறதேயில்லை ??

 • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

  என்னப்பா, ஒரே பிலிம் காண்பிக்கறாங்க.. வெளிநாட்டிலே வேலை செய்யும் மக்கள் வருஷக்கணக்கா தங்களது குடும்பத்தை பாக்கமுடியாம வேலை செய்து சம்பாதிக்கறாங்க.. இவங்க 75 நாளைக்கே இப்படி ஒரு அலட்டு அலட்டறாங்க ??

 • LAX - Trichy,இந்தியா

  இந்த மாளிகையில் இருக்கும்/ இருந்த சிலர் எப்போதுமே.. ஒரே ' உணர்ச்சி' மிகுதியிலேயே இருக்கின்றனர்..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement